தொடங்கியது கோடை… யார் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?

தொடங்கியது கோடை… யார் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?
தொடங்கியது கோடை… யார் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?
Published on

கோடை காலம் தொடங்கிவிட்டதால் அதிகளவு நீர் பருக வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வயது வாரியாக யார் யார் எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும் என பார்க்கலாம்.

6 - 10 வயதுக்கு உட்பட்ட வளரும் சிறார் தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பணியில் ஈடுபடும் 20 - 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தினமும் 2 லி தண்ணீர் குடிப்பது நல்லது.

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் முதியோர் தினமும் 2 லி தண்ணீர் குடிக்க வேண்டும்.

நடனக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீர் வரை குடிக்கலாம்.

வெப்பத்தை தணிக்க

உடல் வெப்பத்தை தணிக்க இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், போன்றவைகளை எடுத்துக்கொள்வது நல்லது. மோர் பருகுவதும் நல்ல பலனை அளிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். கோடையில் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது, குழந்தைகளை வெயிலில் இருந்து காக்க குடை பயன்படுத்துவது சிறந்தது. வயதானவர்கள் வெயில் நேரத்தில் வெளியே வருவதைத் தவிர்ப்பது நல்லது எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.

எலுமிச்சைச் சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சைப் பழ ஜூஸ் உள்ளிட்டவற்றை வெயில் காலங்களில் தண்ணீரோடு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், உடல் சூட்டைக் கட்டுப்படுத்தலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com