புற்றுநோய் வகைகளில் ஒன்றான நுரையீரல் புற்றுநோயானது நுரையீரலிலிருந்து மற்ற உறுப்புகளுக்கு மிக வேகமாக பரவுகிறது. நுரையீரலில் கட்டிகள் இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்துவது சாத்தியம் என்று Express.co.uk-இல் வெளியான கட்டுரையில் நிபுணர் ஆடம் சாப்மன் கூறியுள்ளார்.
ஆனால் இதில் சோகம் என்னவென்றால் நுரையீரல் உள்ளுறுப்பு என்பதால் சருமத்தில் மாற்றம் ஏற்படுவதை உடனே கண்டறிவதைப்போல் எளிதில் கண்டறியமுடியாது. அதே கட்டுரையில், புரியாத மாற்றம் ஏற்பட்டு, அது 3 வாரங்கள் அல்லது அதற்கும் மேல் நீடித்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யவேண்டும் என்று மருத்துவர் அமிர் குறிப்பிட்டுள்ளார்.
கைகளில் காணப்படும் அறிகுறிகள்
நுரையீரல் புற்றுநோய் முற்றும்போதுதான் டிஜிட்டல் க்ளப்பிங் போன்ற அறிகுறிகள் தென்படும் என்கிறது Compassocology.com. புற்றுநோய் செல்களால் சுரக்கும் ஹார்மோன்கள் அல்லது புரதங்கள் போன்றவற்றால்தான் எலும்புகள், மூட்டுகள், மணிகட்டுகள்வரை நகங்களில் மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு. அதேசமயம், பொதுவாக ஃபிங்கர் கிளப்பிங் உருவாக பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால் நுரையீரலில் சீழ்பிடித்தல் போன்ற சில நிலைகளில் இது வேகமாக நிகழலாம் என்கிறது Cancer Research UK-இன் ஆய்வு முடிவுகள்.
ஏன், எப்படி ஃபிங்கர் க்ளப்பிங் ஏற்படுகிறது?
மவுண்ட் சினாய் மருத்துவமனை ஃபிங்கர் க்ளப்பிங் எவ்வாறு ஏற்படுகிறது என்று விளக்கியிருக்கிறது.
அனைத்து ஃபிங்கர் க்ளப்பிங்குமே நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளா?
நகங்களில் தோன்றும் அனைத்து மாற்றங்களுமே நுரையீரல் புற்றுநோயாக இருக்கவேண்டிய அவசியமில்லை. தைராய்டு ஆக்ரோபாக்கி, ஹைபர் பாரா தைராய்டிசம் போன்ற நாளமில்லா சுரப்பிகளாலும் ஃபிங்கர் க்ளப்பிங் ஏற்படலாம் என்கிறது PGMER பாண்டிச்சேரி மற்றும் சிம்லா இந்திரா கந்தி மருத்துவக் கல்லூரியின் ஆய்வு முடிவுகள். ஆட்டோ இம்யூன் தைராய்டு நோயினால் கூடுதல் தைராய்டு சுரப்பதையே தைராய்டு ஆக்ரோபாக்கி என்கிறோம். மேலும் இது அடிக்கடி டெர்மோபதி மற்றும் கண் மருத்துவத்துடனும் தொடர்புடையது என்கிறது.
நுரையீரல் புற்றுநோயின் பிற அறிகுறிகள்
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி நுரையீரல் புற்றுநோயின் மற்ற அறிகுறிகள்...
நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை குறைப்பது எப்படி?
புகைப்பிடித்தலை தவிர்த்தல் - ஏற்கெனவே புகைப்பிடிப்பவராக இருந்தால் அதிலிருந்து விரைவில் வெளியே வர முயற்சிக்கவும்.
புகைபிடிக்கும் இடத்தை தவிர்க்கவும் - நாம் புகைபிடிக்காவிட்டாலும் புகைபிடிப்பவரின் அருகில் இருப்பதும் ஆபத்துதான். எனவே வீடு, கார் போன்ற இடங்களில் புகை இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
வேலைகளில் கவனமாக இருக்கவும் - பணியிடங்களில் ஆரோக்யம் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வழங்குவது பணியாளர்களை புற்றுநோய் காரணிகளிலிருந்து பாதுகாக்கும்.
புற்றுநோய் காரணிகளிலிருந்து தள்ளி இருத்தல்
கல்நார் தூசி மற்றும் சிமெண்ட் துகள்கள் போன்ற புற்றுநோய் காரணிகளிடம் இருந்து தள்ளி இருப்பது அவசியம். 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி உலக வர்த்தக மையம் இடிந்தபோது, மான்ஹாட்டன, புரூக்ளின் மற்றும் நியூ யார்க் பகுதிகளில் காற்று மாசின் அளவு அதிகரித்தது. இதனால் கிட்டத்தட்ட 60000 - 70000 பேர் பாதிக்கப்பட்டனர். நிறையபேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக நிறைய பேருக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டதாக ஆய்வுகள் தெரிவித்தன.
வீட்டிற்கு ரேடான் பரிசோதனை - அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் அனைத்து வீடுகளும் ரேடான் பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ரேடான் என்பது அழுகும் யுரேனியத்தால் உற்பத்தி செய்யப்படுகிற நிறமற்ற, மணமற்ற கதிரியக்க வாயு. கிட்டத்தட்ட எல்லா மண்ணிலும் ரேடான் இருக்கிறது. மேலும் நாம் தினமும் சுவாசிக்கும் காற்றில் மிகக் குறைந்த அளவிலான ரேடான் வாயு காணப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் இந்த வசதி இல்லை. மேலும் அமெரிக்காவைப் போன்று அனைத்து நாடுகளும் இந்த சோதனையை கட்டாயமாக்கவில்லை.