எதிர்பார்ப்புகளை தெரிந்து “சொல்லி அடி” பாகம் -3

எதிர்பார்ப்புகளை தெரிந்து “சொல்லி அடி” பாகம் -3
எதிர்பார்ப்புகளை தெரிந்து “சொல்லி அடி” பாகம் -3
Published on

வேலைவாய்ப்புகள் இல்லை என்று சொல்வதைவிட, எதிர்பார்ப்புகளை தெரிந்து அதற்கான செயல்களைச் செய்தால் வெற்றி நம் கையில் என்பதே இந்த கட்டுரையின் வடிவம். 

வேலைவாய்ப்புகளை உடனடியாக பெறுவதற்கு பல வழிகள் இருந்தாலும், சிறப்பான வழிகளை தேர்தெடுத்து அதில் வெற்றி பெறுவது மட்டுமே நிரந்தரமானவை. 

வேலை தருபவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

     1.    பணியில் சேர்ந்தால் அதிக வருடம் இருப்பார்களா?.
     2.    சம்பளத்தை பார்க்காமல், பணியில் அதிக ஆர்வம் காட்டுவார்களா?
     3.    தங்களது திறமையை காண்பித்து, சம்பளம் கேட்க வேண்டும்.
     4.    நேரம் பார்க்காமல் வேலை செய்யபவர்களாக இருக்க வேண்டும்.
     5.    சம்பளம் இவ்வளவு வேண்டும் என்று சொல்வதற்கு பதில், என் பணியை பார்த்து உங்களால் எவ்வளவு தர முடியும் என்று சொல்ல             வேண்டும்.
     6.    முன்பு வேலை செய்த கம்பெனியில் என்ன சாதனையை செய்திருக்கிறார்கள்.
     7.    கல்லூரியில் படிக்கும் போது, தங்களின் திறமைகளை காண்பித்திருக்கிறார்களா?.
     8.    சுறுசுறுப்பாக செயல்படுவார்களா?.
     9.    சொல்வதை விட செயலில் இறங்குவது என்பதே சிறப்பு.
    10.    மூன்று வருடங்களுக்குப் பின் என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்?.
    11.    எதிர்கால வாழ்க்கையின் மீது நோக்கம் இருக்கிறதா?.
    12.    வேலைக்கு எடுத்தால், இவர்கள் மூலம் நிறுவனம் அதிக லாபம் ஈட்ட முடியுமா?.

வேலைதரும் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் இதுபோன்றவைகளாக இருந்தாலும். தேர்வுக்கு முதல் நாள் வினாத்தாள் கிடைத்தாள், தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்கிற கனவு அனைவரிடமும் எப்படி இருக்கிறதோ. அதுபோலவே, மேலே குறிப்பிட்டுள்ள எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய நினைப்பவர்களும் நிச்சயம் வெற்றியாளர்களே. 
                                        
                                                                                                                                                                                                                                 (தொடரும்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com