”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி

”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி
”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்”  தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி
Published on


தமிழகமே எதிர்பார்த்த 18 எம்.எல்.ஏ தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பு கடந்த 14ம் தேதி வெளியானது. அத்தீர்ப்பில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தரும் தீர்ப்பு அளித்தனர். இரண்டு நீதிபதிகள் அளித்துள்ள மாறுபட்ட தீர்ப்பின் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு தாற்காலிகமாக தப்பியுள்ளது.  எனினும் 18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதி யார் என்பதை நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிப்பார் என உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.  

இதனையடுத்து மூன்றாவது நீதிபதியாக எஸ். விமலாவை இந்த வழக்கை விசாரிக்க பரிந்துரைத்தார். நீதிபதி விமலாவும் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் ஆவணங்களை பரிசீலித்த பிறகு வழக்கை எடுத்துக்கொள்வதா வேண்டாமா என முடிவு செய்வார். இந்நிலையில் வழக்கை திரும்பப் பெறுவதா, வேண்டாமா என்பது பற்றி தொகுதி மக்களுடன் தினகரன் ஆதரவு தகுதி நீக்கப்பட்ட எம்.எம்.ஏ தங்க தமிழ்செல்வன் ஆலோசனை நடத்தினார்.


 
சரி என்னதான் நடக்கிறது தினகரன் அணியில் ? அதிமுகவின் "நமது அம்மா" நாளிதழ் கூட அவ்வப்போது, மீண்டும் கட்சிக்கு திரும்புமாறு கவிதை வாயிலாக 18 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கிறது. இப்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மன நிலை என்ன என்பதை அறிய, சோளிங்கர் தொகுதி (தகுதி நீக்க எம்.எல்.ஏ) என்.ஜி.பார்த்திபனிடம் புதியதலைமுறை இணையதளம் சார்பாக சில கேள்விகளை முன் வைத்தோம். அவரும், நம்மிடம் உற்சாகமாக சில பதில்களை அளித்தார். 

18 எம்.எல்.ஏ தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பாக வந்த தீர்ப்பை எப்படி பாக்குறிங்க..?

எங்களுடைய ஒரே முடிவு டிடிவி தினகரன், சசிகலா என்ன முடிவு பண்றாங்களோ அது தான் எங்க முடிவும். அவங்க முடிவு என்னவோ அதுதான் இறுதியான முடிவு.

தீர்ப்புக்கு பிறகு டிடிவி-கிட்ட பேசினீங்களா ? உங்கள் அணியின் அடுத்தக்கட்ட திட்டம்...?

அதை தலைமைதான் முடிவு செய்யும். தீர்ப்புக்கு பிறகு டிடிவிக்கிட்ட எம்.எல்.ஏகள் எல்லோரும் நிறைய விஷியங்கள் பற்றி பேசினோம். ஆனால் அதை இப்போதைக்கு வெளியில் சொல்ல முடியாது. தலைமை தான் முடிவு செய்யும்.

தினகரன் அணியில் இருப்பவர்கள் எங்கள் அணிக்கு வந்தால் பாராட்டுக்குரியதுனு முதல்வர் சொல்லி இருக்காறே..?

அது அவருடைய கருத்து; நாங்க யாரும் அப்படி போற திட்டம் இல்லை. 

நீங்க எந்த கோரிக்கையை முன்வச்சு ஆளுநரை சந்திச்சீங்களோ அந்தக் கோரிக்கையை இப்போது நிறைவேற்றினால் உங்களின் நிலைபாடு..?

அதிமுக பொதுச் செயளாளர் சசிகலா. மத்திய பாஜக அரசின் துணையோடு, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும் இவர்களுக்கு சாதகமா பண்றாங்க. சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம், இதனால் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது இவர்களை அதிமுக தலைமையாக நாங்கள் ஏற்க முடியது.

அதிமுக இன்னும் கூட எங்களுடையதுனு சொல்றீங்க, ஆனா இந்த ஆட்சி கலைய நீங்க விரும்பல அப்படி புரிஞ்சிக்கிலாமா? 

மத்தியில் பாஜக அரசு இருக்கும்வரை இந்த முதல்வரை மாற்ற மாட்டாங்க. அன்னைக்கு கூவத்தூரில் சசிகலா தான் 122 எம்.எல்.ஏ க்களையும் பாதுகாத்து வச்சு இருந்தாங்க. சசிகலா சொல்வதைத்தான் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கேட்டாங்க. அதற்கு பிறகு அவங்களுக்கு என்ன ஆச்சு...? இதற்கு எல்லாம் ஒரே காரணம் தான் மத்திய பாஜக ! ஏன் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள் அன்றைக்கே இந்த ஆட்சி கலைந்து போய் இருந்தால் இந்த எடப்பாடி பழனிசாமி என்ன செஞ்சியிருப்பாரு...? இதை இயக்குவது எல்லாமே பாஜகதான் !

சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கைக்கு பிறகு தொகுதி பக்கம் போனீங்களா...? தொகுதி மக்கள் என்ன சொல்றாங்க..?

தொகுதி மக்கள் நீதிமன்ற தீர்ப்பைதான் ஆவலா எதிர்பார்த்து காத்திருந்தாங்க.. அதற்கு முன்னாடியும் கூட அவங்க குறைகளை என்கிட்ட கொண்டு வருவாங்க..நாங்களும் எங்களால் முடிந்தவரை அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் அவங்க எங்களுக்கு ஒத்துழைப்பு தர தயாராயில்லை. நான் வேலூர் மாவட்டம். இங்க 60% அதிமுகவிற்கு டெண்டர் தராங்க.. மீதி 40% திமுகவுக்கு தான் தராங்க. அதற்கு அதிமுக அமைச்சரும் உடந்தை. 

அப்படியானால் அதிமுகவில் இருக்கும் அமைச்சர்களே திமுகக்கு உதவுவதா சொல்றிங்களா...?  

100 சதவிதம் அவர்கள் உடந்தை. நீங்க வேலூர் வாங்க உங்களுக்கு எத்தனை உதாரணம் தரேன் நீங்களே பாருங்க..உங்களை ஒவ்வொரு இடத்துக்கும் நானே கூட்டிட்டு போறேன். எந்த எந்த வேலை யாரு செய்றாங்கனு நான் சொல்றேன். யாரு டெண்டர் எடுத்து இருக்காங்கனு காட்டுறேன். அப்போ உங்களுக்கே தெரியவரும். அமைச்சர்கள் திமுகவிடம் தொழில் முறையாகவும் தனிப்பட்ட முறையிலும் நல்லா இருக்காங்க இப்போ மக்களுக்கான பணி எதுவும் நடக்கல. எல்லாமே ஆளும் கட்சியில் இருப்பவர்களும், திமுகவில் இருப்பவர்களும் சேர்ந்து கொள்ளை அடிக்கிறாங்க அது தான் இங்க நடக்குது. நீங்க நேர்ல வந்து பாருங்க எல்லாம் உங்களுக்கு புரியும். 

தீர்ப்பு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றி இருக்காங்க. அதன் இறுதி தீர்ப்பு எப்படி இருக்கும்னு எதிர்பாக்குறீங்க..?

அதைபற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com