ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் பெண்களை போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாகரீகம் வளர்ந்தாலும், பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான சட்ட விரோத செயல்களை குறைக்க ஒரு உறுதிமொழியை முன்னெடுப்போம் இந்த வருட மகளிர் தினத்தன்று.
நீ மண்ணில் பெண்ணாய் பிறந்த நாளிலிருந்து
தந்தைக்கு அழகான இளவரசியாய்,
தாய்க்கு குறும்பான செல்ல மகளாய்,
உடன்பிறந்தோருக்கு அக்கா - தங்கையாய்,
உடன்பிறவாதோருக்கு சிநேகிதியாய்,
திருமணத்திற்கு முன் வரை செல்வியாய்,
திருமணத்திற்கு பின் திருமதியாய்,
கணவனுக்கு மனைவி என்னும் தாரமாய்,
கணவன் பெற்றோருக்கு மருமகளாய்,
கணவன் சகோதரிக்கு நாத்தனாராய்,
கணவன் சகோதரனுக்கு அண்ணியாய்,
கருவுற்று இருந்தால் கர்ப்பிணியாய்,
கருத்தரிக்காமல் இருந்தால் மலடியாய்,
பெற்ற குழந்தைகளுக்கு அன்னையாய்,
பெறாத குழந்தைக்கு சித்தியாய், பெரியம்மாவாய்,
பேரக் குழந்தைக்கு பாட்டியாய்,
கணவன் மறைந்த பிறகு விதவையாய்,
கடவுளில் மகாசக்தியாய், பூமாதேவியாய்,
இந்தியாவிற்கு பாரதமாதாவாய்
இருந்தாய், இருக்கிறாய், இருப்பாய்!