குணமடைந்து பல வாரங்கள் கழித்தும் விந்துவில் இருக்குமா குரங்கம்மை வைரஸ்? -ஆய்வில் அதிர்ச்சி

குணமடைந்து பல வாரங்கள் கழித்தும் விந்துவில் இருக்குமா குரங்கம்மை வைரஸ்? -ஆய்வில் அதிர்ச்சி
குணமடைந்து பல வாரங்கள் கழித்தும் விந்துவில் இருக்குமா குரங்கம்மை வைரஸ்? -ஆய்வில் அதிர்ச்சி
Published on

குரங்கம்மை வைரஸ் உடலுறவின்மூலம் பரவுகிறதா என ஆராய்ச்சியாளர்கள் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டு குணமான பிறகும் சில வாரங்களுக்கு விந்துவில் வைரஸ் தங்கியிருக்கும் என ஷாக் கொடுத்திருக்கிறது ஒரு புதிய ஆய்வு. லான்செட் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு முடிவு இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது.

குரங்கம்மை வைரஸ் பாலுறவால் பரவும் நோயல்ல என்றும், காயங்கள், உடல் திரவங்கள், சுவாசத் துளிகள் மற்றும் அசுத்தமான படுக்கை போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாலேயே தொற்று பரவும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நீண்டநேரம் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் அவர்களிடமிருந்து எளிதில் பரவலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

ஆனால், உடலுறவின்போது பிறப்புறுப்பு திரவத்தின்வழியாக குரங்கம்மை வைரஸ் பரவுகிறது என்ற கூற்று இன்னும் ஆய்வில்தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் இத்தாலியைச் சேர்ந்த பிரான்செஸ்கா கொலவிடா என்ற ஆராய்ச்சியாளர். அவர் கூறுகையில், ‘’குரங்கம்மை வைரஸின் டிஎன்ஏ நீண்டகாலம் வாழும் என்பதால் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் விந்துவில் அவை சில வாரங்கள் உயிர்வாழக்கூடும்’’ என்கிறார் கொலவிடா.

மேலும், ‘’மே மாதத்தின் முதல் 2 வாரங்களில் ஆஸ்திரேலியாவில் பயணம் செய்தபோது குரங்கம்மை அறிகுறிகள் தென்பட்ட 5-19 நாட்களுக்கு 39 வயது நபரின் விந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுசெய்ததில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அவர் பாலியல் தொழில் செய்பவர் மற்றும் ஆணுடன் ஆண் உறவுக்கொள்பவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். குறிப்பாக அந்த நபர் தொற்றால் பாதிக்கப்பட்டதற்கு முந்தைய மாதம் காண்டம் பயன்படுத்தாமல் பல ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டதாக தெரிவித்தார்.

குறிப்பாக அந்த நபர் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர் மற்றும் பல்வேறு பாலியல் நோய்களுடையவர். இவருக்கு குரங்கம்மை தொற்று உறுதியான 5 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த நபருக்கு காய்ச்சல், பிறப்புறுப்பு பகுதிகளில் அரிப்பு புண்கள், தலையில் ஒரு புண், மார்பு, கால்கள், கைகள்,  மற்றும் பிறப்பு போன்ற இடங்களில் புண்கள் இருந்தது. அந்த நபருக்கு சிறுவயதில் ஒருமுறை பெரியம்மை தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் சமீபத்தில் குரங்கம்மை வைரஸ் தொற்றுக்கு என எந்த சிகிச்சையும் அவர் எடுத்திருக்கவில்லை’’ என்கிறார் கொலவிடா.

தொடர்ந்து, ‘’2022ஆம் ஆண்டு குரங்கம்மை தொற்று அதிகரிக்க ஆரம்பித்ததையடுத்து, இந்த நபரை கவனித்ததில் குரங்கம்மை தொற்று பாலியல் ரீதியாக பரவுவதற்காக சாத்தியக்கூறுகள் இருக்கிறது மற்றும் இது தொற்று பரவும் ஒரு வழியாகவும் இருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது.

இருப்பினும், அந்த நபர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவராகவும், வைரஸ் நோயெதிர்ப்பு குறைவானவராகவும் இருப்பதால், விந்தணுவின் குரங்கம்மை வைரஸ் நீண்டகாலம் தங்கியிருப்பதற்கு காரணமாக இருக்கலாம் என்பதால் ஆரோக்கியமான நபரின் விந்தணுக்களிலும் இதேபோன்று வைரஸ் உயிர்வாழும் என்பதை உறுதியாகக் கூறமுடியாது’’ என்கிறார் கொலவிடா.

அதேசமயம், சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளில் குரங்கம்மை வைரஸ் டிஎன்ஏ கண்டறியப்படவில்லை. இது மற்ற சாத்தியமான மூலங்களிலிருந்து விந்து பாதிக்கப்படவில்லை என்பதைக் குறிக்கிறது. இந்த நபர் தவிர, 14 நோயாளிகளில் 11 (79 சதவீதம்) பேரின் விந்து மாதிரிகளிலும், இரண்டு ஹெச்ஐவி நோயாளிகளின் விந்தணுக்களிலும் குரங்கம்மை வைரஸ் டிஎன்ஏ-வை இந்த ஆராய்ச்சிக்குழு கண்டறிந்திருக்கிறது. இருப்பினும் வைரஸ் நோய்த்தொற்று எவ்வாறு ஏற்படுகிறது? விந்தணுக்கள்மூலம் பரவுவதற்காக சாத்தியக்கூறுகள் என்னென்ன என்பதை இனிவரும் ஆராய்ச்சிகள் மூலமே உறுதிப்படுத்தமுடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com