ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் அறிவிப்பை கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டார். அன்றைய தினமே தன்னுடைய கட்சியில் இணைய விரும்புவர்களை ஒன்றினைக்கும் விதமாக ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் செயலியையும் அறிமுகப்படுத்தினார் ரஜினிகாந்த். இதன் மூலம் லட்சக்கணக்காணோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. செயலி மூலம் உறுப்பினர்கள் இணைந்து வந்தாலும் விண்ணப்பங்கள் மூலமும் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்களை சேர்த்து வந்தனர்.
அதேபோல் ரஜினி, கட்சி தொடங்குவதற்கு ஆயுத்த வேலைகளையும் ஒரு புறம் தொடங்கினார். அதில் முதல்கட்டமாக மாநில பொறுப்பாளராக வி.எம் சுதாகரையும், மாநில செலயளாலராக ராஜூ மகாலிங்கத்தையும் நியமித்தார் ரஜினிகாந்த். மேலும் மாவட்ட நிர்வாகிகளை நியமிக்கும் வேலைகளையும் அவர்களிடம் கொடுத்திருந்தார். இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த அந்த பணியில் மாவட்டம், நகரம், ஒன்றியம் என 7000 பேரை நியமித்து அவர்களுக்கு வேலைகள் பிரித்து கொடுத்துள்ளனர். மொத்தம் 38 மாவட்டங்களாக பிரித்து பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகிகளை நியமித்த நிலையில் தற்போது கிளை பதவியை உருவாக்கும் பணிகளில் மாவட்ட நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பணி நிறைவு பெற்றதும் ரஜினிகாந்தின் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகிறது.
இதுதவிர ரஜினி மக்கள் மன்ற செயலியில் சில மாற்றங்களை செய்துள்ளனர். அதில் உறுப்பினர்களாக சேர விரும்புவோர் தங்களின் விபரங்களை பதிவு செய்துக்கொண்டு அதன் மூலமே உறுப்பினர் அட்டை வழங்கும் வசதியை செய்துள்ளனர். மேலும் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளின் பட்டியலும் அதில் இடம்பெற்றுள்ளது. இத தவிர ரஜினிகாந்தின் கட்சி செய்திகள் மற்றும் அறிவிப்புகள் அனைத்தும் அதில் தெரிந்து கொள்ளும் வகையிலும் மாற்றம் செய்துள்ளனர்.
இந்த ரஜினி மக்கள் மன்றம் விரைவில் கட்சியாக மாற்றமடையுள்ளது. இதற்காக கட்சியின் பெயரை தேர்வு செய்யும் வேலைகளும் ஒரு புறம் நடந்து வருகிறது. ஒவ்வொரு வேலைகளையும் வேகமாக நடைபெற்று வருதால் ரஜினிகந்த் விரைவில் கட்சியின் அறிவிப்பை வெளியிட உள்ளார் என கூறப்படுகிறது.