நான் நீ நாம் என அடியெடுத்து வைத்தவர்

நான் நீ நாம் என அடியெடுத்து வைத்தவர்
நான் நீ நாம் என அடியெடுத்து வைத்தவர்
Published on

உமாதேவியின் கவிதைத் தொகுப்பான “திசைகளைப் பருகியவள்”-ஐ படித்துவிட்டு மெட்ராஸ் திரைப்படத்தில் இயக்குநர் ரஞ்சித் அவருக்கு வாய்ப்பளித்தார். அவரது ”நான் நீ நாம்” பாடல்தான் திரைத்துறை பயணத்திற்கு வழிவகுத்தது. இப்போது 25 படங்களுக்கு பாடல் எழுதும் பொறுப்பிருக்கிறது எனும் மகிழ்ச்சியில் இருப்பவர் உமாதேவி. பெண்கள் பிரச்சனைகள், தலித் பெண்ணியம், பெளத்தம் ஆகிய துறைகளில் தொடர்ந்து தனது பங்களிப்பை ஆற்றி வரும் உமாதேவி புதிய தலைமுறை வழங்கிய தமிழ் இலக்கியப் பிரிவிற்கான நம்பிக்கை நட்சத்திரம் விருதை பெற்றிருக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பக்கத்தில் உள்ள அத்திப்பாக்கம் கிராமத்தில் பிறந்தவர் உமாதேவி. பள்ளிப் பருவத்திலேயே கவிதைகள் மீது தீராத தாகம் கொண்டவர். தமிழ் மீது கொண்ட காதலும், கவிதை மீது கொண்ட மோகமும் இவரை தமிழில் முனைவர் பட்டம் பெறவைத்தது. அதன்பிறகு இவர் எழுதிய  ”திசைகளைப் பருகியவள்” கவிஞர்களின் உலகில் உமாதேவிக்கென்று ஒரு முகவரியைக் கொடுத்தது.

பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான உமாதேவி, அந்தத் துறையில் பெண்களும் சாதிக்கலாம் என நம்பிக்கை அளித்தவர்.

பா.ரஞ்சித்தின் மற்றொரு படமான கபாலியில் இவர் எழுதிய வீரத்துறந்தரா என்ற பாடல் வெகு பிரபலம். துறந்தரா என்ற அந்த வார்த்தை தமிழ் சினிமாவுக்கு புதியது. ஆனால் தமிழ் இலக்கியத்தில் மிகக் குறிப்பிடத்தக்க வார்த்தைதான் என்று கூறுகிறார் உமாதேவி. புத்தமதத்தின், கவனம், அறிவு, உண்மை, புரிதல், சரியான எண்ணம், சரியான பேச்சு, சரியான செயல், சரியான வாழ்வியல் ஆகிய எட்டு முக்கிய குணங்களையும் இந்தப் பாடலுக்குள் கொண்டு வர வேண்டும் என்றாராம் உமாதேவியிடம் ரஞ்சித். அத்தனையும் அவர் அந்தப் பாடலில் கொண்டு வந்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com