சாதனைத் தமிழர்களை கெளரவித்த புதிய தலைமுறை

சாதனைத் தமிழர்களை கெளரவித்த புதிய தலைமுறை
சாதனைத் தமிழர்களை கெளரவித்த புதிய தலைமுறை
Published on

புதிய தலைமுறை தொலைக்காட்சி, சாதனைத் தமிழர்களை பாராட்டும் விதமாக 6 பிரிவுகளில் 12 பேருக்கு தமிழன் விருது மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் விருதுகளை வழங்கி கெளரவித்தது.

தமிழ் இலக்கியம், வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, சமூக சேவை, கலை ஆகிய 6 துறைகளில் தமிழன் விருது மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் என இருபிரிவுகளில் 12 பேருக்கு புதிய தலைமுறை விருதுகள் வழங்கியது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த வண்ணமயமான விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

துறைவாரியாக விருது பெற்றவர்கள் பட்டியல்

தமிழ் இலக்கிய பிரிவு

தமிழன் விருது - கவிஞர் வண்ணதாசன்

நம்பிக்கை நட்சத்திரம் விருது - பாடலாசிரியர் உமாதேவி

தொழில்துறை பிரிவு

தமிழன் விருது - டி.டி.ஜெகன்னாதன், டிடிகே குழுமம்

நம்பிக்கை நட்சத்திரம் விருது - சதீஷ்குமார், சிஇஓ, மில்கி மிஸ்ட்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு

தமிழன் விருது - முனைவர் கே.சிவன், இஸ்ரோ

நம்பிக்கை நட்சத்திரம் விருது - முனைவர் விஜயராகவன் விஸ்வநாதன்

விளையாட்டுத் துறை பிரிவு

தமிழன் விருது  - ரவிச்சந்திரன் அஸ்வின்

நம்பிக்கை நட்சத்திரம் விருது - மாரியப்பன் தங்கவேலு

சமூக சேவை பிரிவு

தமிழன் விருது - பேராசிரியர் பிரபா கல்விமணி

நம்பிக்கை நட்சத்திரம் விருது - சூழலியலாளர் ஜி.சுந்தரராஜன்

கலைத்துறை பிரிவு

தமிழன் விருது - பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்

நம்பிக்கை நட்சத்திரம் விருது - இயக்குநர் ராஜூமுருகன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com