கோபாலகிருஷ்ண காந்தி - தெரியாத தகவல்கள்

கோபாலகிருஷ்ண காந்தி - தெரியாத தகவல்கள்
கோபாலகிருஷ்ண காந்தி - தெரியாத தகவல்கள்
Published on

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் கோபாலகிருஷ்ண காந்தி மகாத்மாவின் பேரன் என்பது அனைவரும் அறிந்ததாகும். ஆனால், அவரைப் பற்றி அறியாத தகவல்கள் பல உண்டு.

தேவதாஸ் காந்தி - லட்சுமி தம்பதியின் இளைய மகனான கோபாலகிருஷ்ண காந்தி, கடந்த 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி பிறந்தார். இவர், தந்தை வழியில் மகாத்மா காந்திக்கும் தாய் வழியில் ராஜாஜிக்கும் பேரனாவார். தற்போது 71 வயதாகும் கோபாலகிருஷ்ண காந்திக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். டெல்லி புனித ஸ்டீபன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதுநிலை படிப்பு பயின்ற இவர், பின்னர் ஐஏஎஸ் முடித்து 1968 ஆம் ஆண்டு அரசுப் பணியில் சேர்ந்தார். கோபாலகிருஷ்ண காந்தி 1985 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் அரசு அதிகாரியாகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 1987 வரை துணை குடியரசுத் தலைவரின் செயலாளராகவும், பின்னர் 1992 வரை குடியரசுத் தலைவரின் இணைச் செயலராகவும் பணிபுரிந்தார்.

தென்னாப்பிரிக்கா, இலங்கை, நார்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் இந்தியாவுக்கான தூதராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார். 2003 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணியிலிருந்து ஓய்வு பெற்ற கோபாலகிருஷ்ண காந்தி, 2004 டிசம்பர் 14 ஆம் தேதி மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அம்மாநிலத்தின் 22வது ஆளுநராக பொறுப்பு வகித்த அவர் அப்பதவியிலிருந்து 2009ல் ஓய்வு பெற்றார். கோபாலகிருஷ்ண காந்தி, கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2014 மே மாதம் வரை சென்னையில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com