2002 நவம்பர் 19 உலகமே மறக்காத முடியாத ஒரு நாள். ப்ரெஸ்டீஜ் என்ற கப்பல் ஒன்று நடுக்கடலில் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த பல மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதனால், கடல் வாழ் உயிரினங்கள் மட்டுமல்லாது மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் அழிந்து போனது. எதனால் இந்த விபத்து நடந்தது என்பதை பார்க்கலாம் .
நவம்பர் 13, 2002 அன்று, ப்ரெஸ்டீஜ் என்ற கப்பல் ஒன்று , லாட்வியாவில் உள்ள வென்ட்ஸ்பில்ஸில் இருந்து ஜிப்ரால்டருக்கு இரண்டு வெவ்வேறு தரநிலைகள் கொண்ட 77,000 மெட்ரிக் டன் கட்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு தனது பயணத்தை தொடர்ந்தது. இதன் கேப்டனாக அப்போஸ்டோலோஸ் மங்கூராஸ் இருந்தார். கப்பலின் உரிமையாளர், லைபீரியாவைச் சேர்ந்த மேர் ஷிப்பிங் இன்க்
ஸ்பெயின் வடமேற்கு பகுதியான கலீசியாவில் கேப்டன் மங்கூராஸ், இந்த கப்பலை இயக்கிக் கொண்டிருக்கையில் எதிர்பாராதவிதமாக பெரும் காற்றுடன் புயல் ஒன்றை எதிர்கொண்டது. எப்படியாவது புயலைக் கடந்து கப்பலை செலுத்தி விடலாம் என்று நினைத்தார் மங்கூராஸ். ஆனால், புயலின் வேகம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. பெரிய பெரிய அலைகளால் கப்பல் தடுமாற ஆரம்பித்தது.
புயலின் வீரியத்தை தெரிந்துக்கொண்ட கேப்டன் மங்கூராஸ், உடனடியாக ஸ்பானிஷ் மீட்புப் பணியாளர்களைத் தொடர்புக்கொண்டு உதவி கேட்டுள்ளார். அதற்குள் மிகப்பெரிய இடி ஒன்று கப்பலில் இருந்த ஸ்டார்போர்டை தாக்கியுள்ளது. இதில் கப்பலின் நடுவில் துவாரம் ஏற்பட்டு அதன் வழியாக மெதுமெதுவாக தண்ணீர் கப்பலுக்குள் உட்புக ஆரம்பித்துள்ளது. இதனால் இஞ்சினும் பழுதாக ஆரம்பித்துள்ளது.
அதற்குள் பிலிப்பைன்ஸ் மீட்பு குழுவினர் விரைந்து வந்து தேசமடைந்த கப்பலை பார்வையிட்டனர். கப்பல் மிகப்பெரிய ஆபத்தில் இருப்பது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. கப்பலுக்குள் தண்ணீர் புகுந்ததால், கப்பலிலிருந்த எண்ணெய் கொஞ்சம் கொஞ்சமாக கடலில் கசியத்தொடங்கியுள்ளது.
கேப்டன் மங்கூராஸ் உதவி கேட்டுக்கொண்டதின் பேரில் ஸ்பானிஷ் அரசாங்கம் கேப்டன் செராஃபின் லயஸ் என்ற மூத்த கேப்டனை அனுப்பி வடமேற்காக ஸ்பெயினின் அருகில் ப்ரெஸ்டீஜ் கப்பலை கொண்டுவர ஏற்பாடு செய்தது. அதற்குள் கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்கியிருந்தது. தனது கப்பலின் நிலமையை அறிந்துக்கொண்ட மங்கூராஸ், கேப்டன் செராஃபின் லயஸ் உதவியுடன் கப்பலை ஸ்பானிஷ் துறைமுகத்திற்கு கொண்டு சென்று விட்டால், கச்சா எண்ணெய் கசிவதை நிறுத்திவிடலாம் என்று கூறி இருக்கிறார்.
ஆனால், ஸ்பெயின் அரசாங்கம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. மாறாக தனது எல்லைக்கு அப்பால் கப்பலை கொண்டு சென்று விடுமாறு மங்கூராஸுக்கு கட்டளை இட்டுள்ளது.
வேறு வழியில்லாமல் ப்ரெஸ்டீஜ் கப்பல் தனது போக்கை மாற்றிக்கொண்டு போர்த்துக்கீசிய கடற்பகுதியில் தெற்கே கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கே, போர்த்துகீசிய அதிகாரிகள் கப்பல் தங்களது கடற்கரைக்கு வருவதை அனுமதிக்கவில்லை. ஆகையால் கப்பலை நடுகடலிலேயே இடைமறித்தனர்.
பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் போர்த்துகீசிய அரசாங்கங்கள் தங்கள் பகுதியில் கப்பலை நிறுத்த அனுமதிக்க மறுத்ததால், பல நாட்கள் பயணம் செய்த கப்பலானது 19 நவம்பர் 2002 அன்று நடுகடலில் இரண்டாக உடைந்தது கடலில் மூழ்கியது. இதில் கப்பலில் கொண்டுவரப்பட்ட 77,000 மெட்ரிக் டன் எண்ணெய் கப்பலுடன் கடலில் மூழ்கியது. அதன் பிறகு கப்பல் கேப்டன் மங்கூராஸ் மீட்பு குழுவினருடன் ஒத்துழைக்கவில்லை மற்றும் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஆழ்கடலுக்கு சென்றபிறகும் ப்ரெஸ்டீஜ் கப்பலிலிருந்த எண்ணெய் தொடர்ந்து கசிந்தபடி இருந்தது ஒரு நாளைக்கு தோராயமாக 125 டன் என்ற கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக கடலையும், கடற்கரையையும் மாசுபடுத்தியது. இதில் குறிப்பாக கலீசியாவின் கடற்கரை மிகமோசமாக பாதிப்புக்குள்ளானது. பவளப்பாறைகள், பலவகையான மீன்கள் ,அரிய வகை கடல் உயிரினங்கள், சுறாக்கள், கடலை நம்பி வாழும் பறவை இனங்கள் என்று எல்லாம் கூண்டோடு அழியத்தொடங்கியது. கடல் எண்ணெய் கடலாக காட்சி அளித்தது.
கரை ஒதுங்கிய கசடுகளால் நிலத்தில் வாழும் அட்டைகள் நண்டு போன்ற விலங்குகள் பெரும் அழிவைச் சந்தித்தன.
மேலும், மூன்று நாடுகளும் தங்களது கடற்கரையை சுத்தம் செய்ய பல பில்லியன் பணத்தை செலவழித்தன. கலீசிய அரசாங்கம், 6 மாதம் வரை மீன்பிடித்தலுக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடதக்கது.
இன்னும் கடலுக்கு அடியில் இருக்கும் எண்ணைய் திட நிலையில் ஆங்காங்கே காணப்படுவதாகக் கூறுகிறார்கள்