டைனோசர் காலத்திலே பென்குயின்களும் வாழ்ந்துள்ளன

டைனோசர் காலத்திலே பென்குயின்களும் வாழ்ந்துள்ளன
டைனோசர் காலத்திலே பென்குயின்களும் வாழ்ந்துள்ளன
Published on

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பென்குயின்களின் தோற்றம், குணாதிசயம் மற்றும் அவற்றின் நடை போன்றவற்றை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. அந்தப் பென்குயின்கள் சுமார் 6 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்ததாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதாவது டைனோசர் வாழ்ந்த காலத்திலேயே பென்குயின்களும் இருந்திருக்கும் என அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுமார் 6.5 கோடி வருடங்களுக்கு முன்பு பென்குயின்கள் ராட்சத வடிவில் நடமாடி வந்துள்ளன. அதன்பின் படிப்படியாக முன்னேறி பென்குயின்கள் நிமிர்ந்து, மெதுவான நடைப் பண்புகளை பெற்றதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நியூஸிலாந்து நாட்டில் வைப்பாரா எனும் நகரத்தில் வாழ்ந்த பென்குயின்கள், சுமார் 150 செமீ உயரத்துடன் வாழ்ந்ததாக புதை படிவங்களில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தகைய உயரமான, 17 பென்குவின் இனங்கள் இயற்கையின் காலநிலை மாற்றம் மற்றும் பேரழிவுகளால் அழிந்திருக்கும் என நியூசிலாந்தைச் சேர்ந்த சென்கென்பெர்க் பறவை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கிறது.

அதன்பின் அத்தகைய ராட்சத பென்குயின்கள் முற்றிலும் அழிந்து தற்போது வாழும் சிறிய ரக பென்குயின்கள் தோன்றியிருக்கலாம் எனவும் அந்த ஆய்வில் கூறப்படுகிறது. இப்போது வாழும் பென்குயின்கள் வெறும் 43 சென்டிமீட்டர் உயரத்துடனே உள்ளன. தற்போதைய பென்குயின்களின் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டுகள் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com