குழந்தைகளை புரிந்துக்கொள்ளுங்கள் - இன்று உலக ஆட்டிசம் நாள் !

குழந்தைகளை புரிந்துக்கொள்ளுங்கள் - இன்று உலக ஆட்டிசம் நாள் !
குழந்தைகளை புரிந்துக்கொள்ளுங்கள் - இன்று உலக ஆட்டிசம் நாள் !
Published on

உலகெங்கிலும் இருக்கும் அனைத்து மக்களுக்கும் குழந்தை வரம் என்பது ஒரு தீரா கனவு. ஒவ்வொரு குழந்தையும் ஆராக்கியமாக பிறக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், சில குழந்தைகள் சில பாதிப்புகளுடன் பிறக்கவே செய்கின்றன. அப்படிப்பட்ட ஒரு குறைதான் "ஆட்டிசம். இதனை தமிழில் "தன் முனைப்பு குறைபாடு" என கூறலாம். மனவளர்ச்சி இல்லாத குழந்தைகள் என நாம் நினைப்பவர்களில் பெரும்பாலானோர் ஆட்டிசம் குறைபாடு கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடு, அது நோயல்ல. அவ்வகையான குழந்தைகள் எதன்மீது கவனமில்லாமல் இருப்பார்கள், தானாக சிரித்துக்கொள்வார்கள், எவரிடத்திலும் எளிதாக ஒட்டமாட்டார்கள், தனியாகவே இருப்பார்கள், சுழலும் பொருட்கள் மீது ஆர்வமாக இருப்பார்கள். இவை ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குகான அடையாளங்கள். இவை அனைத்தும் ஒரே குழந்தையிடம் இல்லாமலும் போகலாம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் தேதி உலக ஆட்டிசம் விழுப்புணர்வு நாள் என்று கொண்டாடும் நிலையில், இப்போது ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே சமயம் இந்த குறைபாடிற்கான காரணம் என்ன என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

"ஆட்டிசம்" என்றால் ?

ஆட்டிசம் என்பதை தமிழில் தன்முனைப்பு குறைபாடு என்கின்றார்கள். ஆட்டிசம் பற்றிய முதல் ஆய்வு அறிக்கையை 1943 இல் டாக்டர் லியோ கானீர் என்பவர் நெர்வஸ் சைல்ட் என்ற அறிக்கையில் அறிமுகம் செய்தார். அதன் கருத்துக்கள் பெருமளவிற்கு மறுக்கப்பட்டுவிட்டாலும் அதுவே முதல் அறிமுகம். அங்கிருந்து அவர் ஆய்வுகளில் முன்னேற்றம் கண்டு தற்சமயம் ஆட்டிசத்தில் சில உட்பிரிவுகளையும் கண்டறிந்து உள்ளனர். ஆனால் ஆட்டிசம் குறித்து பல தவறான கருத்துக்கள் நிலவி வருகின்றது அவற்றில் சில – ஆட்டிசம் என்பது உணர்வுகளின் குறைபாடு, ஆட்டிசமும் மனச்சிதைவும் ஒன்று, ஆட்டிசம் குழந்தை பவருத்தில் மட்டும் இருக்கும், பெரியவர்களானவுடன் மறைந்துவிடும், கொடுமையானவர்கள், யாரிடமும் அன்பாக இருக்கமாட்டார்கள், ஆட்டிச குழந்தைகள் அனைவரும் புத்தி கூர்மையுள்ளவர்கள், ஆட்டிச குழந்தைகள் பேசவே மாட்டார்கள், ஆட்டிச குழந்தைகள் அனைவரும் ஒன்று போலவே இருப்பார்கள், போன்றவை அவை. 

எப்படி ஏற்படுகிறது ஆட்டிசம் குறைபாடு ? 

புலன் சார்ந்த உணர்வுகளை அனுபவிப்பதில் மற்றவர்களிடமிருந்து இக்குழந்தைகள் வேறுபட்டு இருப்பர்கள். புலன் சார்ந்த தூண்டல்களுக்கு இவர்கள் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உணர்ச்சிகளை வெளிக்காட்டுவார்கள். ஒரு சிலருக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட புலன்கள் குறைவாகவோ (ஹைபோ) அதிகமாகவோ(ஹைபர்) தூண்டப்படும். சுற்றுப்புறச் சூழலில் உள்ள புலன் சார்ந்த நிகழ்வுகள் ஒரு சிலரைக் கடுமையாகப் பாதிகும். சிலருக்கு அது மிகவும் வேதனை அளிப்பதாகவும் இருக்கும். இது எல்லா புலன் சார்ந்த தூண்டலுக்கும் பொருந்தும். ஆனால் அவர்களுக்கு ஒலி, ஒளி, சுவை, மணம் மற்றும் தொடு உணர்வுகள் சராசரியை விட அதிகமாகவோ குறைவாகவோ செயல்படும். ஆகையால்தான் அவர்களில் பலர் மாற்றமில்லா ஒரேவகையான நடைமுறையை விரும்புகின்றனர். எப்படி சரிபடுத்துவது?ஆட்டிசத்தை சரி செய்ய முடியாது. முன்னேற்றம் காண வைக்கலாம். அவர்களுக்கு என்று பிரத்தியேக பயிற்சிகள் உண்டு. அவர்களுக்கு என்று உணவு முறைகள் உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கு ஒவ்வொரு பயிற்சி முறை. எந்த பயிற்சி என்பதை பெற்றோர்கள் தான் தீர்மானிக்க முடியும்.

குழந்தைகளை ஒதுக்காதீர்கள் 

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஒதுக்கக் கூடாது என மருத்துவர்கள் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர். பெரும்பாலான ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள் என அடையாளப்படுத்தி விடுகின்றனர். இன்னும் பெற்றோர்களுக்கும் மருத்துவர்களுக்கும் பரவலான விழிப்புணர்வு இதைப்பற்றி கிடையாது. கிராமப்புறத்தில் இதன் விழிப்புணர்வு மிக மிக குறைவு. இந்த மாதிரியான அடையாளங்களுடன் இருக்கும் குழந்தைகளை நீங்கள் உங்கள் பகுதியில் அல்லது அருகாமையில் பார்த்தீர்கள் என்றால், அந்த பெற்றோர்கள் இது ஆட்டிச குறைபாடு என்பதை தெரிவிக்க வேண்டும். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், எப்போதும் குழந்தைகளாகவே இருப்பார்கள், நாம் பெரியவர்களாய் நின்று அவர்களுக்கு உதவ வேண்டும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com