பரளிக்காடு வனப்பகுதியில் இயற்கை சுற்றுலா

பரளிக்காடு வனப்பகுதியில் இயற்கை சுற்றுலா
பரளிக்காடு வனப்பகுதியில் இயற்கை சுற்றுலா
Published on

தினசரி பரபரப்புகளில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறவர்களுக்காக கோவை மாவட்ட வனத்துறை இயற்கை சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது.

இயற்கை வளம் கொட்டிக்கிடக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையின் பரளிக்காடு வனப்பகுதியில் பூச்சமரத்தூர் என்னுமிடத்தில் சூழல் சுற்றுலாவுக்கான வசதிகளை உருவாக்கியுள்ளது கோவை மாவட்ட வனத்துறை. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் இயற்கை சூழலில் அவற்றை கண்டு ரசிக்கும் வகையில், பாதுகாப்பாய் தங்கும் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மூன்று தங்குமிடங்களில், அறைக்கு எட்டுபேர் வீதம் 24 பேர் தங்கலாம். மூன்று வேளை உணவு, பரிசல் பயணம் உள்பட அனைத்து வசதிகளுக்கும் சேர்த்து ஒரு நபருக்கு 1500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இக்காப்பு காட்டில், ஆறு வனத்துறையினர் மற்றும் எட்டு பழங்குடியினத்தவர் பாதுகாப்புடன், காட்டுப்பயணம், பழங்குடி மக்களோடு இணைந்து பாரம்பரிய விளையாட்டுகள் என புதுமையான அனுபவங்கள் சுற்றுலா பயணிகளுக்கு காத்திருக்கின்றன.இந்த சூழல் பயணத்தை மேற்கொள்ள விரும்புவோர் ஆன் லைன் மூலமாகவோ 98430 94900 - 9489739273 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு ஒரு வாரம் முன்பாக முன்பதிவு செய்வது அவசியம் என்கின்றனர் கோவை மாவட்ட வனத்துறையினர்.

பரளிக்காடு சூழல் சுற்றுலா பயணம் செல்ல விரும்புவோர், கோவை வந்து மேட்டுப்பாளையம் வழியாக காரமடை வரவேண்டும். அங்கு வனத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.சென்னையில் இருந்து ரெயில் மூலமாக வந்தால் ஒருவருக்கு ஏறக்குறைய 2 ஆயிரம் ரூபாய் செலவாகும். விமானம் மூலம் கோவை வந்து அங்கிருந்து பரளிக்காடுக்கு வந்தால்,ஒருவருக்கு 5500 ரூபாய் செலவாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com