ஒப்போ நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் தனது புதிய தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது. A94 என்ற மாடலை ஒப்போ நிறுவனம் ஐக்கிய அமீரகத்தில் லான்ச் செய்துள்ளது. இப்போதைக்கு இதன் விலை குறித்த விவரங்கள் சஸ்பென்சாக இருந்தாலும், இந்த போனில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
கடந்த அக்டோபரில் வெளியான A93 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்த அமோக ஆதரவை அடுத்து, அதன் அடுத்த வெர்ஷனாக A94 அறிமுகமாகியுள்ளது.
6.43 இன்ச் ஃபுள் HD மற்றும் AMOLED டிஸ்பிளே கொண்டுள்ள இந்த போனின் ரெஸலுஷன் 2400 x 1080 பிக்சல்களாக உள்ளது. மீடியாடெக் ஹீலியோ P95 சிப்செட் உள்ள இந்த போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் மெமரி உள்ளது.
ரியர் சைடில் நான்கு கேமரா இடம்பெற்றுள்ளது. அதில், பிரைமரி கேமரா 48 மெகா பிக்சல்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32 மெகா பிக்சல் செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது. 4310 மில்லியாம்பியர் - ஹவர் பேட்டரி கொண்டுள்ள இந்த போனில் 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இரண்டு வண்ணங்களில் வெளியாகியுள்ள இந்த போனில் டைப் சி சார்ஜிங் போர்ட் இடம்பெற்றுள்ளது.