கீழ்ப்பாக்கம் சந்திப்பில் பூந்தமல்லி செல்லும் சாலையில் பெரிய அளவில் ஈ. வே.ரா பெரியார் சாலை என சுவற்றில் எழுதப்பட்டுள்ளது.
ஏப்ரல் 13-ந்தேதி அன்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாநகராட்சி ரிப்பன் மாளிகை, சென்டிரல் ஆகிய இடங்களில் புதிய பெயர் பலகைகள் வைக்கப்பட்டது. இதில் பெரியார் ஈ.வெ.ரா.சாலை பெயருக்கு பதிலாக ‘கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க்' சாலை என்று பெயர் மாற்றப்பட்டு இருந்தது.
பெரியார் சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ‘கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க்' சாலை என்று எழுதப்பட்டிருந்த பெயர் பலகை மீது கறுப்பு மை பூசி அழித்தனர். அதன் பின்னர் பூந்தமல்லி சாலையில் உள்ள நெடுஞ்சாலை துறை பெயர் பலகையில் ஈ வே.ரா பெரியார் சாலை என திருத்தி எழுதப்பட்டது.
இந்நிலையில், தற்போது கீழ்ப்பாக்கம் சந்திப்பில் பூந்தமல்லி சாலையில் பெரிய அளவில் ஈ. வே.ரா பெரியார் சாலை என சுவற்றில் எழுதப்பட்டுள்ளது. அதில் கோயம்பேடு, பாரிமுனைக்கு செல்லும் வழி என குறிப்பிடப்பட்டுள்ளது.
- ந.பால வெற்றிவேல்