இசை எங்கே இருந்து வருது ? இன்று உலக இசை தினம்

இசை எங்கே இருந்து வருது ? இன்று உலக இசை தினம்
இசை எங்கே இருந்து வருது ? இன்று உலக இசை தினம்
Published on

இசைக்கு மயங்காதோர் இல்லவே இல்லை என்று கூறலாம். ஒரே ஒரு விஷயம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு விதமான இசை பிடிக்கும். ஆனால், உலகெங்கிலும் உள்ள நாகரீக சமுதாய மக்கள் மட்டும் அல்லாமல் ஆதிவாசிகளுக்கு கூட இப்போதும் எப்போதும் இசை தங்கள் வாழ்வில் ஓர் அங்கம். இசை என்பது மனிதனின் உணர்வுகளில் ஒன்று. ஒவ்வொரு நாட்டுக்கும் இசை இருக்கிறது, ஆனால் அவை மொழிகளுக்கு அப்பாற்பட்டது.

ஒவ்வொரு மனிதனின் மனோ நிலையையும் இசை தீர்மானிக்கிறது. பெரும்பாலான மனிதர்களின் நினைவுகளையும் அதன் நிகழ்வுகளையும் இசை மீட்டெடுக்க கூடியது. இசையின் வடிவங்கள் வேறாகலாம். இந்தியாவை பொறுத்தவரை திரை இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி, கஜல், பறை என ஏராளமான இசை வடிவங்கள். இதில் திரையிசை முதல் பறையிசை வரை இந்தியாவில் தனி மனிதனின் வாழ்வின் தொடக்கம் முதல் இறுதி வரை பயணப்பட்டுக் கொண்டிருக்கும்.

உலகளவில் பல்வேறு இசை வகைகள் உள்ளன அதில் பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, மற்றும் நவீன இசை என பல பரிமாணங்கள் உருவாகின. உலகில் ஒவவொரு நாடும் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு பல வகையான இசைகளை இசைக்கின்றனர். ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி, ஹார்டு ராக், ஹெவி மெட்டல் உள்ளிட்ட இசை வகைகள் உலகளவில் பிரபலம்.

இந்தியாவில் இரண்டு இசை வகைகள்தான் பிரபலம். ஒன்று வட இந்தியாவின் ஹிந்துஸ்தானி பின்பு தென்னகத்தின் கர்நாடக இசை. அதிலும் கர்நாடக இசை வடிவம் கடவுள் அளித்த கொடையாக இன்றும் பார்க்கப்படுகிறது. கர்நாடக இசை வடிவங்களின் பிதாமகர்களான தியாகராஜரும், முத்துசாமி தீட்சிதரும், ஷாமா சாஸ்திரிகளும் கடவுளே இந்த இசை வடிவத்தை அளித்துள்ளதாக தங்களது பல்வேறு கீர்த்தனைகளில் தெரிவித்துள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை தோன்றிவிட்டாலும். வெளிநாடுகளில் இசை உருவானது எப்படி என்றால் விலங்குகளில் இருந்து மனிதன் தன்னை பாதுகாக்க எழுப்பிய சத்தத்தின் மூலம் உருவானதுதான் இசை. இன்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் "ஹிப்ஹாப்" இசை வடிவம் இப்படி உருவானதுதான் என்பது பிரபல இசை ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

இந்தியாவில் மிகவும் போற்றப்படும் இசைக்கு ஒரு காலத்தில் தடை இருந்தது. ஆம், மொகலாய மன்னன் அவுரங்கசிப் காலத்தில் இசைக்கு தடைப் போடப்பட்டிருந்தது. எங்கும் எதிலும் இசை என்பதை அவுரங்கசிப் வெறுத்தார். இஸ்லாத்துக்கு எதிரானது என அவர் ஆட்சி செய்த காலம் வரை இசைக்கு தொடர் தடை விதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், இசைக் கலைஞர்கள் பலர் கடும் தண்டனைகளையும் விதித்தார். இத்தனை துயரங்களையும் மீறி பல்வேறு வடிவங்களில் இசை இன்னும் இந்திய இசை வாழ்ந்து வருகிறது.

திரை இசை இல்லாத இந்தியர்களின் வாழ்வை கனவில் கூட நினைத்துபா ர்க்க முடியாது. மிகப்பெரிய இசை மாமேதைகளை உருவாக்கிய நாடு இந்தியா. எம்.எஸ்.சுப்புலட்சுமி, வயலின் கலைஞர் எல்.சுப்பரமணியம், பண்டிட் ரவிசங்கர். பாலமுரளி கிருஷ்ணா, கங்குபாய் ஹங்கல், படே குலாம் அலி கான், குன்னக்குடி வைத்தியநாதன், ஹரிபிரசாத் சௌராசியா, பீம்சென் ஜோஷி, என். ரவிக்கிரன், கத்ரி கோபால்நாத், மாண்டலின் சீனிவாஸ், ஜாகிர் ஹூசைன் என இசைச் கலைஞர்களில் சிலர்.

திரை இசையை பொறுத்தவரை நவ்ஷத், ஆர்.டி.பர்மன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், நஸ்ரத் பதே அலிகான், கிஷோர் குமார் என பட்டியல் நீளும். இந்த இசையமைப்பாளர்கள் உருவாக்கின பாடல்களைதான் தினம்தோறும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நாள் தோறும் கேட்டு தங்களது நினைவுகளை மீட்டு இசையோடு இன்புற்று வருகின்றனர். அப்படிப்பட்ட உலக இசை தினத்தை, நமக்கு பிடித்தமான இசையோடு கொண்டாடுவோம்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com