ஹெல்த்டிரிங்ஸ் என்ற பெயரில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு, tin food ஐ கொடுத்து வருகின்றார்கள். உண்மையில் இது ஹெல்த்டிரிங்ஸ்தானா என்ற சந்தேகம் பல பெற்றோர்களுக்கு எழுந்ததில்லை. காலையில், மாலையில் இருவேளைகளில் ஹெல்த்டிரிங்ஸ் குடித்து வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் ஹெல்தியாகவும் இருப்பார்கள் என்று பல பெற்றோர்கள் நினைத்துவரும் இந்த நேரத்தில், போர்ன்விட்டா ஹெல்த்டிரிங்ஸ் இல்லை என்ற அதிர்ச்சியான செய்தியை குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
பிண்ணனி என்ன?
சமீபத்தில், NCPCR இன் விசாரணையின் பின்னணியில் Bournvita வில் சர்க்கரையின் அளவானது குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக இருக்கிறது, இது குழந்தைகளுக்கு தீங்கை விளைவிக்கும், ஆகவே இதை ஹெல்த் டிரிங்ஸாக ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் கூறியுள்ளது. ஆகையால் போர்ன்விடாவை ஹெல்த் டிரிங்க்ஸ் என்ற பிரிவிலிருந்தும், அவர்களின் போர்டல் (முகப்பு) மற்றும் தளங்களில் இருந்து நீக்குமாறும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
இந்திய உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் தர நிர்ணய ஆணையமானது, (FSSAI) NCPCR அமைப்புகளிடம், பாதுகாப்புத் தரங்கள், வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறிய நிறுவனங்களையும், மேலும் பவர் சப்ளிமெண்ட்டுகளை 'ஆரோக்கிய பானங்கள்' என்று சொல்லும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது.
இதன் தொடர்ச்சியாக, குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (NCPCR), சிலபல விசாரணைக்குப் பிறகு, FSSAI மற்றும் Mondelez India Food Pvt Ltd விதிகள் மற்றும் விதிமுறைகளின் படி, Bournvita ஹெல்த்ட்ரிங்ஸ் பிரிவில் வரவில்லை என்று ஏப்ரல் 10 தேதியிட்ட அறிவிப்பில், அரசாங்கம் இதை தெரிவித்துள்ளது.
ஆய்வறிக்கையின் முடிவு
NCPCR இன் விசாரணையின் பின்னணியில், Bournvita அதிகப்படியான சர்க்கரை அளவைக் கொண்டுள்ளது என்றும் அதில் கலக்கப்படும் நிறமானது குழந்தைகளுக்கு கேடுவிளைவிக்ககூடும் என்பதால் இதை ஹெல்த்டிரிங்க்ஸிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளது.
ஆக, நாம் ஹெல்த்ட்ரிங்ஸ் என்று தினமும் குழந்தைகளுக்கு என்ன வகையான ஒரு டிரிங்ஸை கொடுத்து வருகிறோம் என்பது நமக்கு தெரியாமல் இருந்துள்ளத். இனியாவது பெற்றோர்கள் கூடுமான அளவு இதுபோன்ற டிரிங்க்ஸை தவிர்த்து, தானியங்களை கொண்டு மாவு தயாரித்து அதை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.