குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கும் ‘பத்திரிகைகள்’

குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கும் ‘பத்திரிகைகள்’
குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கும் ‘பத்திரிகைகள்’
Published on

நாடு முழுவதும் இன்று தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்படுகிறது. பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நவம்பர் 16 ஆம் தேதியை தேசிய பத்திரிகையாளர் தினமாக அறிவித்துள்ளது.

இந்தியா விடுதலை பெற்றபின் பத்திரிக்கை சுதந்திரத்துக்கும் விடிவுகாலம் பிறந்தது எனலாம். அதன்பின் உருவான இந்திய அரசியலமைப்பு சட்டம், மக்களாட்சியில் எழுத்துரிமையையும் பேச்சுரிமையையும் அடிப்படை உரிமைகளாக அறிவித்தது.  அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவது மட்டுமின்றி, மக்களின் பிரச்னைகளை அரசிற்கும் சமூகத்திற்கும் வெளிப்படைத்தன்மையுடன் கொண்டு சேர்ப்பதிலும், நாட்டில் நிலவும் குற்றங்கள், மோசடிகள், ஊழல்கள் போன்றவற்றை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் ‘இன்வெஸ்டிகேஷன் ஜெர்னலிசம்’ விளங்குகிறது.  

என்னதான் கருத்து சுதந்திரத்துடன் செயல்பட்டாலும் பல நேரங்களில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும், பத்திரிகையாளர்கள் படுகொலைகளும், சில பத்திரிகைகள் மீது வழக்குகள் பதியபட்டு ஒடுக்கப்படுவதும் அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன. யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட தகவலின் படி உலகம் முழுவதும் ஒவ்வொரு 4.5 நாட்களுக்கும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுகிறார். இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 5 பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பிப்ரவரி 14, 2016 அன்று கருண் மிஸ்ரா, தலைவர், ஜன் சந்தேஷ் டைம்ஸ்; மே 13, 2016 ராஜ்தியோ ரஞ்சன், தலைமை செய்தியாளர், இந்துஸ்தான் டைம்ஸ் இந்தி பதிப்பு; மே 16, 2016 இந்திரதேவ் யாதவ், ஊடகவியலாளர், தாஸா தொலைக்காட்சி; ஆகஸ்டு 22, 2016 கிஷோர் தவே, ஜெய்ஹிந்த் சஞ்ச் சமாச்சார்; நவம்பர் 12, 2016 தர்மேந்திர சிங், சிறப்பு நிரூபர், தாய்னிக் பாஸ்கர் மற்றும் அண்மையில் பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளரும், இந்துத்துவ எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் அடையாளம் தெரியாத நபர்களால் அவர் வீட்டின் வாசலிலேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற நாட்டை ஒப்பிடும்போது இந்தியப் பத்திரிகைகள் தேவையான சிந்தனை சுதந்திரத்தோடு செயல்படுகின்றன என்கிறது ஒரு கருத்து கணிப்பு. உலக அளவில் பத்திரிகை சுதந்திரம் உள்ள நாடுகளில் இந்தியா 136-வது இடத்தில் உள்ளது. உலகிலேயே பத்திரிகை சுதந்திரத்தைப் பொறுத்த அளவில், நார்வே முதலிடத்தில் உள்ளது.பத்திரிகைகளுக்கு சுதந்திரம் அளிப்பதில் கடைசி இடத்தில் இருப்பது வடகொரியா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com