நூறு சாமிகள் இருந்தாலும்...தாய்மையைப் போற்றும் டூடுல்!

நூறு சாமிகள் இருந்தாலும்...தாய்மையைப் போற்றும் டூடுல்!
நூறு சாமிகள் இருந்தாலும்...தாய்மையைப் போற்றும் டூடுல்!
Published on

தாய்மையைப் போற்றும் விதமாக அன்னையர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ’நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னை போல் ஆகிடுமா?’ என்பது போன்ற அன்னையை போற்றும் பாடல்கள் ஆயிரம் இருந்தாலும் அம்மாவின் அன்புக்கு ஈடு இணையில்லைதான்.

இதனை கொண்டாடும் வகையில் கூகுள், தாய் மற்றும் குழந்தையின் மீது தாய்க்காட்டும் பாசத்தை அனிமேஷன் வடிவில் டூடுளில் வெளிப்படுத்தி அன்னையை கௌரவித்துள்ளது.

‘எந்த பிள்ளையும் நல்ல பிள்ளை தான் மண்ணில் பிறக்கையிலே! அது நல்லவனாவதும் கெட்டவனாவதும் அன்னை வளர்ப்பினிலே!’ என்ற வரிகளுக்கேற்ப குழந்தை வளர்ப்பு என்ற கலையை நேர்த்தியாகச் செய்வது மட்டுமின்றி, குடும்பத்தை வழிநடத்துவதிலும் அன்னையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. வாழும் தெய்வங்களாய் வலம் வரும் அன்னையர்களை போற்றும் வண்ணம், ஆண்டு தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், கூகுள் அதன் முகப்பு பக்கமான டூடுலில் அன்னையின் தியாகத்தை கதையாக வெளிப்படுத்தி உள்ளது. அனிமேட்டட் டூடுலில் ஒரு கள்ளிச்செடி தனது கர்ப்பத்திலிருந்து தொடங்கி, புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஊட்டமளித்து, நல்ல பண்புடன் வளர்த்து இறுதியாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதை கதையாக வெளிப்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு அன்னையர் தினத்துக்காக கர்ப்பிணியை போற்றும் வகையில், இந்தக் கதையை வடிவமைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com