கடலில் மீன்களை மிஞ்சும் பிளாஸ்டிக் ...

கடலில் மீன்களை மிஞ்சும் பிளாஸ்டிக் ...
கடலில் மீன்களை மிஞ்சும் பிளாஸ்டிக் ...
Published on

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 130 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கிறது என்றும் 2050ம் ஆண்டு முடிவில் இது 4 மடங்காக அதிகரிக்கும் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

கடந்த 2015-ம் ஆண்டு வரை சுமார் 322 மில்லியன் மெட்ரிக் டன் கழிவு கடலில் காணப்பட்டது. கடலில் கலந்த கழிவுகளில் பெரும்பாலாக தினசரி உபயோகிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், ரப்பர்கள், மற்றும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவையே அதிகளவில் காணப்படுகிறது. இந்த கழிவுப் பொருட்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், 2050-ம் ஆண்டில், இதன் அளவு, 4 மடங்காக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Weforum.org வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், சிகரெட் லைட்டர்கள், பாட்டில் மூடிகளை, கடலில் உள்ள பாலூட்டிகள் சாப்பிடுகிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் உலக சுற்றுச்சூழல் பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளை உருவாக்குகிறது. மலிவான விலையில் கிடைக்கும் இந்த பிளாஸ்டிக், நாளடைவில் பூமியை மாசுபடுத்துகிறது. 
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும், சுமார் 130 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கிறது. இந்த நிலை நீடித்தால், 2050ம் ஆண்டு முடிவில், கடலில் மீன்களைக் விட, பிளாஸ்டிக் கழிவுகளே அதிகமாக இருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிளாஸ்டிக் பொருட்கள் மனிதர்களை மட்டுமின்றி, வன உயிரினங்களுக்கு தீவிர அச்சுறுத்தலாக உள்ளது. இறந்த திமிங்கலங்கள் மற்றும் பறவைகளின் வயிற்றுப் பகுதியில் அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்களே காணப்படுவதாகவும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, கடலில் கலந்துள்ள கழிவுகளை அகற்ற வேண்டும், பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கலக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com