உலகிலுள்ள மற்ற ஜீவராசிகளை விட மனித இனம் தான் மேம்பட்டது. மனித இனத்திற்கு தான் பகுத்தறியும் திறன் உண்டு என்ற பெருமை நிலவி வருகிறது. ஆனால் மனிதனிடம் உள்ள தனித்துவமிக்க சில இயல்புகள் குரங்குகளிடமும் இருப்பது அண்மையில் நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மனித குணங்களில் உள்ள சுய விழிப்புணர்வு மற்றும் மொழி கையாளல் போன்ற உணர்வுகள் குரங்குகளிடமும் இருப்பதை நியூயார்க்கில் உள்ள ராக்பெல்லர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது சமூக ஈடுபாடு மனிதர்களில் அதிகம் காணப்படுவது போன்று குரங்குகள் மத்தியிலும் காணப்படுவதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
நியூயார்க்கில் உள்ள ராக்பெல்லர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், குரங்கின் மூளையிலுள்ள நரப்பு வலையமைப்பை FMRI (Functional Magnetic Resonance Imaging) முறையில் ஸ்கேன் செய்து பார்த்த போது இந்த உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்குகளின் மூளைகளில் உள்ள நியூரான்களில் மனிதர்களை போன்று கற்பனைத்திறன் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.