”மக்கள் பணியிலே 12 ஆண்டுகள் நிறைவு செய்து 13வது ஆண்டைத் துவங்க இருக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
”தமிழக மக்கள் இன்று சந்திக்கக்கூடிய பலவிதமான பிரச்னைகள், செய்திகள் இவைகளெல்லாம் உடனுக்குடன் எடுத்து மக்களுக்கு தெரிவிக்கக்கூடிய ஒரு நிறுவனமாக நல்ல கருத்து ஆழமிக்க விவாதங்களையும் விமர்சனங்களையும் ஒளிபரப்பக்கூடிய தொலைக்காட்சி என்கிற பெருமையை புதிய தலைமுறை தொலைக்காட்சி பெற்றிருக்கிறது . மேலும் பல்லாண்டு நடைபெற்று வெற்றிபெருவதற்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.
”புதிய தலைமுறை தொலைகாட்சி தமிழக காட்சி ஊடகதொலைகாட்சியில் புதுமையையும் பெரும் மாற்றத்தையும் ஏற்படுத்திய வரலாறு கொண்டது. தொடங்கப்பட்ட நாளிலிருந்து இயற்கை பாதுகாப்பிற்கான எல்லா வகையான ஆதரவையும் இந்த ஊடகம் தந்துக்கொண்டிருக்கிறது. இயற்கையை பல இடங்களில் சேதாரமில்லாமல் காப்பாற்றியதில் பங்கு கொண்டுள்ளது. ஒரு இயற்கை ஆர்வலராக எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
தொலைகாட்சியில் செய்தி என்ற நினைவு எழும்பொழுது புதியதலைமுறையின் பங்களிப்பு பெரியது. புதிய தொழில்நுட்பத்துடன், வடிவமைப்புடன் செய்திகளை உடனுக்குடன் தருவதில் புதிய தலைமுறை சிறந்து விளங்குகிறது. அதற்காக எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
”புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடங்கி 12 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 13ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. தமிழகத்தில் இருக்கிற முக்கிய செய்தி தொலைகாட்சியில் முக்கிய புதிய தலைமுறை முக்கிய பங்காற்றுகிறது. நேயர்களின் பெரும் ஆதரவை பெற்றிருக்கிறது. மேலும் பன்மடங்கு முன்னேற வாழ்த்துகள்” என்றார்.
”12ம் ஆண்டை நிறைவு செய்து, 13ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்ற புதிய தலைமுறை மேலும் முன்னேற எனது மனப்பூர்வ வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். புதிய தலைமுறை பணி சிறக்க எனது வாழ்த்துகள்” என்று வாழ்த்தியுள்ளார்.
”புதிய தலைமுறை என்று பெயர் சூட்டியவரை நான் பாராட்டுகிறேன். புதிய தலைமுறை என்றவுடன் ஒரு புத்துணர்ச்சி பிறக்கிறது. இந்த தொலைகாட்சி நிறுவனத்தின் நோக்கம் தெளிவுபடுத்தப்படுகிறது. ஒரு தலைமுறையை உருவாக்குதல், ஒரு தலைமுறையை மேம்படுத்துதல் என்ற குறிக்கோள்கள் அதற்குள் பொதிந்துகிடக்கின்றன. நிறுவனத்தை நிறுவியவர்கள், நிர்வாகிகள், உழைக்கும் ஊடகவியலர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்று வாழ்த்தியுள்ளார்.
”புதிய தலைமுறை நேயர்களுக்கும், புதிய தலைமுறை பணியாளர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். செய்தியின் பின்புலத்தை அறிந்து, ஆராய்ந்து, விழிப்புணர்வுக்கு பாடுபட்டு ஒரு திருத்தம் கொண்டு வருவதற்கு சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கும் பல்வேறு நிகழ்சிகளை நடத்தி வருகிறார்கள். உங்களுக்கு எனது வாழ்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று வாழ்த்தியுள்ளார்.
”தமிழகத்தில் மிக முக்கியமான ஒரு தொலைக்காட்சி, தமிழர்களின் தொலைகாட்சி. எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ அங்கெல்லாம் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு செய்து, விளிம்பு நிலை மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் இயங்கக்கூடிய மிக முக்கியமான தொலைகாட்சி. ஆய்வின் அடிப்படையில் தான் அவர்கள் செய்திகளை வெளியிடுவார்கள். இதே சிறப்புடன் இதே ஆளுமையுடன் அடுத்த பல நூறு ஆண்டுகள் தமிழ் மக்களுக்காக சேவை செய்ய வேண்டுமென்று இந்த நல்ல நாளில் நான் கேட்டுக்கொண்டு மறுபடியும் வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று வாழ்த்தியுள்ளார்.
”குறிஞ்சி பூக்கும் பூவிற்கு ஒரு காலம் இருக்கிறது. 12 ஆண்டுகளில் புதிய தலைமுறை புதிய தமிழகத்தை உருவாக்குகிற ஒரு முயற்சியில் ஈடுபட்டு 13 ஆண்டை நோக்கி செல்வதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். புதிய தலைமுறைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று வாழ்த்தியுள்ளார்.
”இளைஞர்களே ஒரு நாட்டின் சக்தி என்கிற தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவன் நான். டார்வின் கோட்பாட்டின்படி ஒவ்வொரு தலைமுறையும் தன் முன்னோர்களை விட அறிவியல் கூர்ந்தும் திறனில் தேர்ந்தும் வருகிறது.
இன்றைய தலைமுறை இளைஞர்களை மனதில் நிறுத்தி தொடங்கப்பட்ட செய்தித் தொலைக்காட்சி புதிய தலைமுறை பன்னிரண்டு ஆண்டுகளைப் பாய்ந்து கடந்திருக்கிறது. என் வாழ்த்துகள்”
என்று நடிகரும் இயக்குநரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டரில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
”தமிழ் ஊடகத்துறையில் தனி அடையாளம் படைத்துள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி 13-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஊடகத்துறையில் சிறப்பாக செயல்பட்டு புதிய உச்சங்களைத் தொடுவதற்கு வாழ்த்துகிறேன்.” என்று வாழ்த்தியுள்ளார்.