”தமிழகத்தில் பாஜகவுக்கான எதிர்காலம் நல்லா இருக்கு...” : குஷ்பு சிறப்பு பேட்டி!

”தமிழகத்தில் பாஜகவுக்கான எதிர்காலம் நல்லா இருக்கு...” : குஷ்பு சிறப்பு பேட்டி!
”தமிழகத்தில் பாஜகவுக்கான எதிர்காலம் நல்லா இருக்கு...” : குஷ்பு சிறப்பு பேட்டி!
Published on

சமீபத்தில் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறிய குஷ்பு புதியதலைமுறையின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் நெறியாளர் கார்த்திகை செல்வனின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.

அவரிடம் எழுப்பப்பட்ட சில கேள்விகளும் பதில்களும்...

கேள்வி: இந்தியா இந்துதுவா நாடு என பாஜக கூறுவது குறித்து உங்களின் பார்வை என்ன?

பதில்: என்னுடைய பார்வையில் சிறுபான்மையினர் இங்கு இருக்கவே கூடாது என்று அவர்கள் சொல்லவில்லை. அப்படியிருந்தால் உத்திரபிரதேசத்தில் இருக்கும் சிறுப்பான்மையினர் முழுவதும் பாஜகவிற்கு வாக்களித்திருக்க மாட்டார்கள். காங்கிரஸிற்கு ஒரு வாக்கும் வரவில்லை. மத்திய பிரதேசத்திலும் அப்படிதான்.

சிறுபான்மையினரை வைத்து மட்டும் தான் காங்கிரஸ் அரசியல் செய்து கொண்டிருந்தது. நான் 6 வருடத்திற்கு முன்பு சேரும்போது இருந்த காங்கிரஸ் இப்போது இல்லை. நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. காலையில் அமர்ந்து என்ன ஹேஸ்டேக் டிரண்டாக்கணும் என்று பேசியது உண்டு. நானும் அதை செய்திருக்கிறேன். இதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

கேள்வி: பாஜகவினர் 2 ரூபாய்க்கு டிவீட் போடுற கட்சி என்று சொன்னீர்களே?

பதில்: ஆம். சொன்னேன். நான் இல்லை என்று சொல்லவில்லை. என்னுடைய ட்வீட் பொருத்தவரைக்கும் என்னுடைய அட்மின் போட்டுவிட்டார். அதனால் நான் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லவில்லை. பாஜகவிற்கு வந்த பின்பு அந்த டிவீட்லாம் நீக்கவும் செய்யவில்லை.

கேள்வி: ஹத்ராஸ் பெண்ணிற்கு நடந்த கொடுமைகள் குறித்து கடுமையாக பாஜகவை விமர்சித்தீர்கள். தற்போது உங்கள் நிலைபாடு என்ன?

பதில்: அதே நிலைப்பாடுதான். என்னுடைய வார்த்தைகளில் இருந்து பின்வாங்க விரும்பவில்லை. அதேநேரத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு எதிராக எந்த தவறு நடந்தாலும் அங்கு யார் ஆட்சி நடந்தாலும் நான் எதிர்ப்பேன். நான் இப்போதும் பெண்ணியவாதியாகவே இருக்கிறேன்.

கேள்வி: ஹத்ராஸ் பெண்ணிற்கு நடந்த கொடுமைக்கு ஏன் பிரதமர், உள்துறை அமைச்சர் போன்றோர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அது ஏற்புடையதாக இருக்கிறதா?

பதில்: நம்மிடம் இருக்கும் தவறான விஷயம் என்னவென்றால் எதற்கெடுத்தாலும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதில் சொல்ல வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் இதற்கு பிரதமர் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். இதுவரை நான் அவரை பார்க்கவில்லை. நான் பார்க்கும்போது கண்டிப்பாக கேட்பேன்.

கேள்வி: காங்கிரஸில் என்ன நெருக்கடியை சந்தித்தீர்கள்?

பதில்: ஒரு கட்சி என்றால் எல்லோருடைய பேச்சையும் கேட்க வேண்டும். மட்டம் தட்டி உட்கார வைக்கிறார்கள். திமுகவிலும் காங்கிரஸிலும் எனக்கு ஒரு சீட் கொடுங்கள் என்று நான் கேட்டதே கிடையாது. என்னை சந்திப்பதற்கு ராகுல்காந்தி நேரம் ஒதுக்கவில்லை. சுற்றி இருக்கிறவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்கிறார். மக்களுக்கும் கட்சிக்கும் இடையில் இருப்ப்பவர்கள் பிரச்னை.

கேள்வி: குஷ்பு பேசுவதில் காங்கிரஸில் என்ன தடை இருக்கு?

பதில்: என்னை என்ன வேலை செய்ய விட்டார்கள்? எனக்கு கொடுத்த வேலையை நான் 200 சதவீதம் செய்து கொண்டிருந்தேன். நான் பெயர், புகழ் அனைத்தும் பார்த்துட்டேன். கட்சிக்குள் போய்தான் பெயர் வாங்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என அவசியமில்லை. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பிறகு வந்த தலைவர்கள் எதற்கும் என்னை அழைப்பது கிடையாது.

கேள்வி: தமிழகத்தில் பாஜகவுக்கான எதிர்காலம் எப்படி இருக்கிறது?

பதில்: கண்டிப்பா நல்லா இருக்கு. கிரவுண்ட் வொர்க் நல்லா பண்றாங்க. மேலோட்டமாக பார்த்துவிட்டு பேசக்கூடாது.

கேள்வி: 2 நாட்களில் குஷ்புவிடம் இவ்வளவு மாற்றமா?

பதில்: இரண்டு நாட்களில் கிடையாது. என்னுடைய ராஜினாமா கடிதத்தை பிப்ரவரியிலேயே தயார் செய்து வைத்து விட்டேன். காங்கிரஸில் இருக்கக்கூடாது என அப்போதே முடிவு செய்துவிட்டேன்.

கேள்வி : பாஜகவை ஏன் தேர்வு செய்தீர்கள்?

பதில்: பிரதமர் மோடி மீது இருக்கும் நம்பிக்கை. 6 மாதமாக நான் மோடியின் செயல்பாடுகளை ஆய்வு செய்தேன். பலமுறை மனசாட்சிக்கு எதிராக பேசினேன்.

கேள்வி: பாஜக அலுவலகம் போகும்போது எப்படி இருந்தது?

பதில்: மிகவும் புதிதாக இருந்தது. பயமாக இருந்தது. ஏனென்றால் காங்கிரஸ் மட்டும்தான் எங்களுக்கு தெரியும். கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. பள்ளிக்கூடத்திற்கு முதல் நாள் செல்வது போன்று இருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com