உலகின் மிகச்சிறந்த காதல், நட்பு, மக்களுக்கான சித்தாந்தம் இவையனைத்தும் ஒரே ஒரு மனிதன் வசம் என்றால், அந்தப் பெருமைக்கு சொந்தக்காரர் கார்ல் மார்க்ஸ்தான். போராட்டம், வறுமை, பசி ஆகியவை மட்டுமே வாழ்க்கை முழுவதும் நிறைந்திருந்த பொழுதும் கூட எளிய மனிதர்களும், உழைக்கும் மக்களும் எப்படி துன்பச்சுழலில் இருந்து விடுதலை பெறுவது என ஓய்வில்லாமல் சிந்தித்த அசாதாரணமான மனிதர் பிறந்த தினம் இன்று.
தத்துவஞானி, பொருளாதார மேதை, சமூகவியலாளர், பத்திரிகையாளர், புரட்சிகர சோசியலிஸ்ட், உலக வரலாற்றை வேறு போக்கில் மாற்றிய மேதையான கார்ல் மார்க்ஸை அவரது 199-ஆம் பிறந்தநாளில் நினைவுகூர்வோம்.
♦ ”உலகத் தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள்!
நீங்கள் இழப்பதற்கு எதுவுமே இல்லை-
அடிமைத்தனத்தை தவிர! ஆனால்
வெல்வதற்கு இந்த உலகமே இருக்கிறது!”
♦ “நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே, பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாகிறது!”
- கார்ல் மார்க்ஸ்