இரவு சாப்பிட்ட பின் கொஞ்ச நேரம் நடந்துதான் பாருங்களேன்! எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?

இரவு சாப்பிட்ட பின் கொஞ்ச நேரம் நடந்துதான் பாருங்களேன்! எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?
இரவு சாப்பிட்ட பின் கொஞ்ச நேரம் நடந்துதான் பாருங்களேன்! எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?
Published on

நடப்பது எப்போதும் உடல்நலத்துக்கு நன்மை பயக்கக்கூடியது. காலையோ, மாலையோ அல்லது இரவோ எப்போது சிறிது நடந்தாலும் அது உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும். எப்படியாயினும், இரவு உணவிற்கு பிறகு 2 நிமிட நடைபயிற்சி மேற்கொள்வது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

சமீபத்தில் ஸ்போர்ட்ஸ் மெடிசன் இதழில் வெளியான மெட்டா பகுப்பாய்வில் இதுகுறித்து விளக்கப்பட்டுள்ளது. அமர்ந்தே இருப்பவர்களுக்கும் நிற்பவர்கள் அல்லது நடப்பவர்களுக்குமான இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த சர்க்கரை அளவு ஆகியவை கணக்கிடப்பட்டு ஒப்பிடப்பட்டது. குறிப்பாக இரவில் சிறிது நேரம் நடப்பவர்களுடைய இதய ஆரோக்கியம் மற்றும் நீரிழிவு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருந்தது கண்டறியப்பட்டது.

மெதுவான நடைபயிற்சியும் ரத்த சர்க்கரை அளவும்

2-5 நிமிட மெதுவான நடைபயிற்சியானது ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பதாக கூறுகிறது அந்த ஆய்வு. மேலும் மெதுவான நடைபயிற்சியானது உடலுக்கு அதிக அழுத்தத்தை கொடுப்பதில்லை என விளக்கியுள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்கள், ரத்த சர்க்கரை அளவில் அதீத ஏற்ற இறக்கங்கள் இருப்பதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இல்லாவிட்டால் நாள்பட்ட உடல்நல பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றனர்.

நீரிழிவு நோயை சாதாரணமாக நினைத்து கட்டுக்குள் வைத்திராவிட்டால், கற்பனைகூட செய்யமுடியாத அளவுக்கு இதய பிரச்னைகள், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். எப்போதும் அமர்ந்திருப்பது, நிற்பதைவிட மெதுவாக நடப்பது தசைகளை செயலில் வைக்கிறது.

மேலும் உணவிலிருந்து கிடைக்கும் சக்தியை அதிகளவு ரத்த ஓட்டத்திற்கு பயன்படுத்துகிறது. தசைகள் அதீத குளுக்கோஸை உறிஞ்சுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

டின்னர் சாப்பிட்ட ஒரு மணிநேரத்துக்குள் நடப்பதால்...

இரவு உணவு சாப்பிட்டு 60 -90 நிமிடங்களுக்குள் நடப்பது சிறந்த ரிசல்ட்டை தரும் என்கின்றனர் நிபுணர்கள். எனினும் மெதுவாக நடைபயிற்சியை எப்போது மேற்கொண்டாலும் அது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆனால் இரவு உணவுக்குப்பின் கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்குள் நடப்பது ரத்த சர்க்கரை அளவு உயராமல் கட்டுக்குள் இருக்க உதவுகிறது.

நாள்முழுவதும் சிறுசிறு நடைபயிற்சி மேற்கொள்வது வேலை நேரங்களில் மந்த நிலை ஏற்படுவதை தடுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்கள் அடிக்கடி எழுந்து நடப்பது மிகவும் நல்லது. குறிப்பாக மதிய உணவு மற்றும் ஜூம் மீட்டிங்குகளுக்கு நடுவே நடைபயிற்சி சிறந்தது.

உணவுக்கு பிறகு நடப்பதால் ஏற்படும் நன்மைகள்

வாயுத்தொல்லை மற்றும் வயிற்றுப்பொருமல்

தினசரி சில நிமிடங்கள் உடலுக்கு இயக்கம் கொடுப்பது வாயுத்தொல்லை, வயிற்றுப்பொருமல் மற்றும் வயிறு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடல் அசைவானது செரிமான மண்டலத்தின் இயக்கத்தை தூண்டுகிறது என்கின்றனர்.

மன ஆரோக்கியம்

நடப்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த வழிகளில் ஒன்று. இது மன அழுத்தம், மன பதற்றம் மற்றும் மன சோர்விலிருந்து விடுபட உதவும். ஏனெனில் நடப்பது மன அழுத்தத்தை உருவாக்கும் அட்ரலின் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் சுரப்பை குறைக்கும்.

தூக்கம்

தொடர் உடற்பயிற்சியானது இன்சோம்னியா என்று சொல்லக்கூடிய தூக்கமின்மை பிரச்னையை சரிசெய்ய உதவுகிறது. தூக்கமின்மையே பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு வேராயிருக்கிறது. இன்சோம்னியா பிரச்னையால் அவதிப்படுபவர்கள் மருத்துவர்களால் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

ரத்த அழுத்தம்

தினசரி சீரான உடல் இயக்கம் கொடுப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவானது கட்டுக்குள் இருக்கும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் மகிழ்ச்சியையும் தூண்டுகிறது. மேலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com