பெருநகரமாக இருக்கும் சென்னை எப்படி இரவு நேரங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதமான புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியின் PT Digital சார்பில் ஒரு முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, காவலர்கள், காவலாளிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், தேநீர் வியாபாரிகள், துப்புரவு பணியாளர்கள் என பலரது அனுபவங்கள் குறித்தும், இரவு நேரங்களில் பணியாற்றுவதால் அவர்களுக்கு நேரும் சாதக பாதகங்கள் என்னென்ன என்பது குறித்தும் படமாக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னையில் இரவு நேரங்களில் டீ வியாபாரம் செய்யும் மாரிமுத்துவை பற்றிதான் பார்க்கப் போகிறோம்.
புதுக்கோட்டையின் அறந்தாங்கியைச் சேர்ந்த மாரிமுத்து சென்னையில் இரவு நேரங்களில் தெரு தெருவாக சென்று டீ விற்று வருகிறார். பகலில் கம்பெனிகளுக்கு சென்றும் டீ விற்று வருகிறாராம்.
ALSO READ:
13 வருஷத்துக்கு முன்பு 3 ரூபாய்க்கு விற்ற டீயின் விலை தற்போது 10 ரூபாயாக மட்டுமே உயர்ந்திருக்கிறது என்கிறார் மாரிமுத்து. டீ விற்பதற்கு முன்பு ஜவுளி கடையில் வேலை பார்த்த போது சொந்த ஊருக்கு போய் வீடு கட்டி செட்டில் ஆகிடலாம் என்ற எண்ணத்தோடு போய் கடன் அதிகமானதால் டீ வித்துட்டு இருக்கேன் என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “6 லட்சம் ரூபாய் கடனை அடைக்க 10, 11 வருஷமா வெறும் வட்டியை மட்டுமே 18 லட்சத்துக்கு கட்டிட்டு இருக்கேன். நைட்டும் பகலுமா பாக்குற வேலையில வர காசெல்லாம் வட்டி கட்டவே சரியா இருக்கு” என வேதனையுடன் கூறும் மாரிமுத்து, தனக்கு 4 மகள்கள் இருப்பதாகவும், அவர்களை ஒற்றையாளாக தானே வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.
லட்சக்கணக்கில் தனக்கே கடன் இருக்கும் வேளையில், படிப்புக்காக தனது மகள்கள் கஷ்டப்படுவதை போன்று மற்ற பிள்ளைகளும் கஷ்டப்பட கூடாது என்று எண்ணி தன்னால் முடிந்தவற்றை அந்த 3 குழந்தைகளுக்கும் செய்து வருவதாகவும், தன்னுடைய பெண் பிள்ளைகளிடமும், நன்றாக படித்து முன்னேறி ஆதரவற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் எனவும் சொல்லி வளர்ப்பதாக பெருமை பொங்க கூறியுள்ளார் மாரிமுத்து.
இத்தனை கஷ்டத்துக்கும் இடையேவும் தனக்கான தன்மானத்தை காக்கும் வகையில் எவருக்குமே வட்டி பாக்கியை வைக்காமல் கட்டி வருகிறாராம்.
டீ வியாபாரி மாரிமுத்துவின் ஒருநாள் பணி குறித்து அவரே பேசிய வீடியோவை காண:
ALSO READ: