தவிர்க்கமுடியாத பணியாளராக மாறுவது எப்படி?

தவிர்க்கமுடியாத பணியாளராக மாறுவது எப்படி?
தவிர்க்கமுடியாத பணியாளராக மாறுவது எப்படி?
Published on

தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தொடர்ச்சியாக பாய்ச்சலடைந்து வரும் காலம் இது. கணிசமான சம்பளத்துடன் வேலைக்கு சேரும் இளைஞர்கள், போன வேகத்தில் வேலையை விட்டு நீக்கப்படும் நிகழ்வுகள் என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இத்தகைய சூழலில் ஒரு பணியாளர் தன்னை தக்கவைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? நிறுவனத்திற்கு தேவையான திறமைக்காரராக மாறுவதுதான் இதற்கு ஒரே வழி. ஆட்குறைப்பு, நிறுவனத்தின் பொருளாதார மேலாண்மை என பல காரணங்கள் சொல்லி பணியாளர்களை நீக்கும் சூழல் ஏற்பட்டாலும், தனித்து ஒளிர்வதற்கான தகுதி உடைய தவிர்த்துவிட முடியாத நபராக நாம் இருக்கிறோமா என நம்மை நாமே பரிசோதித்துப் பார்த்திருக்கிறோமா?

பின்வரும் தகுதிகள் உங்களுக்கு இருந்தால்... நீங்கள் ஒரு தவிர்க்க முடியாத பணியாளர்தான்:

♣ நிறுவனத்திற்கு தேவையான திறன், செயல்பாடு ஆகியவற்றில் மிகச்சிறந்த நிபுணத்துவத்தை பெற்று, ”அப்டேட்டட் அறிவனாக” இருப்பது மிகவும் அவசியம்.

♣ நமக்கு மட்டுமே எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்காமல், நுணுக்கங்களையும், பணிரீதியான ஆதரவையும் சக பணியாளர்களுக்கு அளித்தால் நீங்கள் ஹீரோதான்.

♣ கஷ்டமான, சவாலான சூழல்களிலும் உங்களால் பணியாற்ற முடியும்.. வேலையை முடித்துவிடும் சாமர்த்தியம் உங்களுக்கு இருக்கிறது என்று நிரூபித்தால்... நீங்கள் நிறுவனத்திற்கு தவிர்க்க முடியாத நபர்.

♣ சரியான தீர்வுகளை அளிப்பது ஒரு தனி கலை. வேலை ரீதியாக நிறுவனம் சந்திக்கும் சிக்கல்களின் மூல காரணத்தை தெரிந்துகொண்டு, மிகச்சரியான தீர்வை உங்களால் அளிக்க முடியுமானால்... நிறுவனத்தில் நீங்கள் தனித்தன்மையுடன் திகழ்வீர்கள்... அவரை விட்டால் அதுக்கு ஆள் கிடையாதுப்பா என்ற பெயரை எடுப்பீர்கள்.

♣ உங்களுக்கு அடுத்த மேல் நிலையில் உள்ள டீம் லீடர் அல்லது சுப்பீரியரின் வேலையை உங்களின் நிபுணத்துவத்தால் எளிதாக்க உங்களால் முடியுமானல்.. உங்களைத் தவிர்க்கவே முடியாது..

♣ உங்கள் குழுவுக்குள் ஒருங்கிணைப்பை உருவாக்க உதவுங்கள். அலுவலகத்தில் மற்றவர்களை கீழிறக்கும் கீழான பாலிடிக்ஸில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளாதீர்கள். அத்தகைய செயல் நிச்சயம் உங்களுக்கு ஒரு நன்மையும் செய்யாது. அது உங்கள் பெயருக்கு நீங்களே ஏற்படுத்திக்கொள்ளும் களங்கமாகத்தான் இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com