திருவாதிரை களி, திருவாதிரை கூட்டு
களி செய்வது எப்படி:
பச்சரி 3 கப், துவரம்பருப்பு கால் கப்.. இவற்றை எடுத்து நன்கு சிவக்க வறுத்துக்கொள்ள வேண்டும், ஆறிய பின் அதை மிக்ஸியில் குருனையாக உடைத்துக்கொள்ள வேண்டும்.
பாத்திரத்தில் 3 கப் வெல்லம் எடுத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவேண்டும். பின் உடைத்து வைத்துள்ள குருனையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு அடுப்பை சிறிதாக்கி நன்கு வேகவிட வேண்டும். குருனை வெந்ததும் இறக்கி வைத்து அத்துடன் நெய்யில் ஏலக்காய் , முந்திரி வறுத்து அதில் போடவேண்டும். களி ரெடி!
கூட்டு
களிக்கு தொட்டுக்கொள்ள 9 காய்கறிகள் சேர்த்து கூட்டு ஒன்று செய்யப்படும். அதன் செய்முறை:
துவரம் பருப்பு அரை கப் வேகவைத்து கொள்ளவேண்டும். பிறகு புளி, ஒரு எலுமிச்சை அளவு எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும், அதில் தேவையான காய்கறிகளை போட்டு உப்பு சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் தேங்காய், சிவப்பு மிளகாய், மிளகு, தனியா, போன்றவற்றை சிறிது எண்ணெய் விட்டு நன்கு வறுத்து, அரைத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள் நன்கு வெந்ததும் அரைத்து வைத்த மசாலா, வேகவைத்த பருப்பை அதில் போட்டு நன்கு கிளறி, வாசனை வந்ததும் இறக்கி வைத்து தாளிக்கவேண்டும்.
நாளை ஆருத்ரா தரிசனத்திற்காக பிரத்தேயமாக அனைத்து ஆலயங்களிலும், வீடுகளிலும் சிவபெருமானுக்கு பிடித்ததாக கூறப்படும் களியை நேவேத்தியமாக படைப்பார்கள்.