இந்தியாவை உலுக்கிய டாப் 5 ஆணவக் கொலைகள்

இந்தியாவை உலுக்கிய டாப் 5 ஆணவக் கொலைகள்
இந்தியாவை உலுக்கிய டாப் 5 ஆணவக் கொலைகள்
Published on

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சராசரியாக 1000 ஆணவக் கொலைகள் நடப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அதிலும் வருடந்தோறும் இதன் எண்ணிக்கை 796 சதவீதம் அதிகரிப்பதாகவும் அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கைகளும் இதனை உறுதிப்படுத்துகின்றனர்

மனோஜ் – பாப்லி கொலை

2007-ம் ஆண்டில் ஹரியானாவில் திருமணம் செய்து கொண்ட இருவர் கடத்திக் கொலை செய்யப்படனர். காவல்துறை வழக்கை விசாரித்த போது , ஆணவக் கொலை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. திருமணம் செய்து கொண்ட இருவரும் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள். இரு குடும்பங்களுக்கும் காதல் விவகாரம் தெரிந்திருந்தும், ஒரே சாதியை சேர்ந்தவர்களாக இருந்தும் பெற்றோரின் ஆணவத்தால் கொலை நிகழ்ந்தது. திடீரென ஒருநாள் மனோஜை காணவில்லை, தேடும் போது பாப்லியையும் காணவில்லை என்பது தெரிந்தது. விசாரித்தபோது இருவரும் திருமணம் செய்து கொண்டது தெரிகிறது. மனோஜ் மீது பாப்லி குடும்பம் கடத்தல் வழக்கு போட நீதிமன்றம் சென்ற தம்பதிகள் தங்கள் திருமணத்தை உறுதி செய்ய, நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. இருவரும் டெல்லி செல்ல முடிவெடுத்து கிளம்புகிறார்கள். ஆனால் கொலை செய்யப்பட்டதாக தகவல் வருகிறது. காவல்துறை விசாரணையில் ஊர் பஞ்சாயத்து முடிவு அடிப்படையில் இருவரும் கொலை செய்யப்பட்டதாக தெரிந்தது. பஞ்சாயத்து தலைவரான பாப்லியின் தந்தை , தனது மகன்களை கொண்டு இந்த கொலையை செய்தார். ஒரே சாதியாக இருந்தபோதும் உட்பிரிவின் அடிப்படையில் மனோஜ் தாழ்ந்த சாதி என்கிறார் பாப்லியின் தந்தை. கொன்றது சரி என்றும் நீதிமன்றத்தில் வாதிட, ஆயுள் தண்டனை வழங்கியது நீதிமன்றம்.

நிதிஷ் கட்டாரா கொலை

இந்தியாவின் புகழ் மிக்க கல்வி நிறுவனமான ஐஐஎம் மில் படித்தவர் நிதிஷ். அப்போது உடன் படித்த பார்தியுடன் காதல். இருவர் வீட்டிலும் காதலை வெளிப்படுத்தினர். ஆனால் பார்தி வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருநாள் திருமணம் ஒன்றுக்காக நிதிஷ் செல்ல, பார்தியின் சகோதரர்களும் அதில் கலந்து கொண்டனர். நிதிஷை கூட்டிக் கொண்டு பார்தியின் சகோதரர்கள் சென்றதாக அங்கிருந்த சிலர் கூறினார்கள். நீண்ட நேரமாகியும் நிதிஷ் திரும்பாததால் அவரோடு திருமணத்திற்கு வந்த பரத், அவரை தேடிக் கொண்டு பார்தி வீட்டுக்கு சென்றார். பார்தியும் நிதிஷை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தது தெரிந்தது. காணாமல் போனதாக புகார் கொடுக்க, நிதிஷ் கடத்தி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பார்தியின் சகோதரர்கள் அளித்த வாக்குமூலத்தில், நிதிஷை கடத்திச் சென்று அடித்து கொலை செய்து விட்டு, பின்னர் பெட்ரோல் ஊற்றி அவரை எரித்ததை ஒப்புக் கொண்டனர். ஆனாலும் இந்த விவகாரத்தில் பார்தி பலமுறை தங்களது உறவை மறைத்ததும், நீதிமன்றத்தை ஏமாற்றிவிட்டு வெளிநாடு சென்றதும் நடந்தது. தங்கள் உறவை வெறும் நட்பு என்று மட்டுமே அவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்ததும் கூட அரங்கேறியது. ஆனால் அவரின் சகோதரர்களிடம் நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வந்ததோடு, பார்தி மிக கொடூரமாக மிரட்டப்பட்டதும் தெரிய வந்தது.

பாவனா கொலை

2014-ம் ஆண்டு நவம்பர் – டெல்லி பல்கலைகழகத்தில் படித்து வந்த பாவனா என்ற பெண் தனது பெற்றோரால் கொல்லப்பட்டார். டெல்லியில் படித்து வந்தபோது பாவனாவுக்கு அபிஷேக் என்பவர் மீது காதல். எத்தனையோ முறை தனது பெற்றோரை அழைத்து பேசியும் அவர்களுக்கு திருமணத்தில் விருப்பமில்லை. வேரூ வழியுமின்று அபிஷேக்கை திருமணம் செய்து கொண்டார் பாவனா.

இறுதியில் மன்னித்து விட்டோம் வீட்டுக்கு வா என பாவனாவுக்கு அவரது பெற்றோரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. மிகுந்த சந்தோஷத்தோடு தனது பெற்றோரை பார்க்கச் சென்றார் பாவனா. ஆனால் அவரை தலையில் தாக்கி, சாதி வெறி குறித்து பாடம் எடுத்து, எரிக்க முயற்சித்தனர்.

காசிபூர் கொலை

தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரம் உத்தர பிரதேசத்தில் நடந்தது. 2013-ம் வருடம் வேறு சாதியை சேர்ந்த ஆண் ஒருவரை திருமணம் செய்து கொண்டதற்காக நடந்த கொலை இது. 17 வயதான கர்ப்பினியான தனது மகளை நயவஞ்சமாக பேசி, வீட்டிற்கு அழைத்து அவரை அடித்து மயக்க நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார் ரமேஷ் ராஜ். பின்னர் தனது மகளை , நண்பரின் வீட்டுக்கு கொண்டு சென்று டார்ட்டர் செய்து, அவரும் அவரது நண்பரும் பாலியல் வன்கொடுமை செய்கின்றனர். இறுதி வரை தனது திருமணத்தில் இருந்து பின்வாங்க அந்தப் பெண் மறுக்க. கொலை துப்பாட்டாவில் கட்டி மரத்தில் தூக்கிட்டதை போல் நாடகமாடுகின்றனர். காவல்துறை விசாரணையில் கொலை செய்தது கண்டுபிடிக்கப்படுகிறது.

சங்கர் கொலை

தலித் ஒருவரை தனது மகள் திருமணம் செய்து கொண்டதை பொறுக்க முடியாமல் , மகளையும் , அவள் திருமணம் செய்துகொண்டவரையும் கொல்வதற்கு தந்தையே ஆள் அனுப்புகிறார். கூலிப்படை , பட்டப்பகலில் மக்கள் நடமாடும் இடத்தில் வைத்து இருவரையும் தாக்குகின்றனர். அரிவாளாலும், கூரிய ஆயுதங்களாலும் தாக்குதல் நடத்தியதில் சங்கர் உயிரிழந்தார். கௌசல்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். சின்னசாமி முக்கிய குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்ததோடு, மரண தண்டனை வழங்கியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com