பாரம்பரிய இடங்கள் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடம்!

பாரம்பரிய இடங்கள் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடம்!
பாரம்பரிய இடங்கள்
பாரம்பரிய இடங்கள் பாரம்பரிய இடங்கள்
Published on

சீனாவின் புஜோவில் நடைபெறும் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவின் 44-வது அமர்வின்போது, தெலுங்கானாவின் ககாதியா ருத்ரேஷ்வரா (ராமப்பா) கோயில் மற்றும் குஜராத்தை சேர்ந்த தோலவிரா ஆகிய இடங்களை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்த்து அங்கீகரித்துள்ளனர். இதையடுத்து, இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய இடங்களின் எண்ணிக்கையானது தற்போது 40 ஆக உயர்ந்துள்ளது.

உலக பாரம்பரிய சின்னங்களில் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் 12.71 சதவிகிதமும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பகுதிகளில் 47.08 சதவிகிதமும், ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் 24.11 சதவிகிதமும், அரபு நாடுகளில் 7.66 சதவிகிதமும், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து 8.44 சதவிகித பகுதிகளும் உலக பாரம்பரிய இடங்களில் இடம் பிடித்துள்ளன.

இதன்படி, உலகிலேயே அதிகளவு பாரம்பரிய இடங்கள் இருக்கும் நாடுகளில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. இங்கு 57 பாரம்பரிய இடங்களும் உள்ளன. இரண்டாவது இடத்தில் இருக்கும் சீனாவில் 56 பாரம்பரிய இடங்களும், மூன்றாவதாக இருக்கும் ஜெர்மனியில் 51 பாரம்பரிய இடங்களும் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை 40 பாரம்பரிய இடங்களுடன் 6 வது இடத்தைப் பெற்றுள்ளது.

இதற்குமுன், இந்தியாவில் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள கோயில்கள், வாரணாசியில் உள்ள கங்கை நதிக்கரை படித்துறை, சத்புரா புலிகள் காப்பகம் உள்ளிட்ட ஆறு இடங்கள் உலக பாரம்பரிய இடங்களுக்கான பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்ததற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com