நாமக்கல்: இதுதான் ஸ்மார்ட் வீடு.. எல்லாமே ஆட்டோமேட்டிக்.. அசத்தும் இளைஞர்!

நாமக்கல்: இதுதான் ஸ்மார்ட் வீடு.. எல்லாமே ஆட்டோமேட்டிக்.. அசத்தும் இளைஞர்!
நாமக்கல்: இதுதான் ஸ்மார்ட் வீடு.. எல்லாமே ஆட்டோமேட்டிக்.. அசத்தும் இளைஞர்!
Published on

நாமக்கல்லில் அறிவியல் தொழில் நுட்பத்தை தனது வசதிக்கு ஏற்ப மாற்றி பொறியியல் பட்டதாரி வாலிபர் அசந்தி வருகிறார்.

நாமக்கல்லில் வீட்டுக்குள் நுழைந்தால் தானாகவே இயங்கும் மின்விசிறி, தானாகவே ஆன் ஆகும் கம்ப்யூட்டர் என தனது வசதிக்காக தன் வீட்டில் உள்ள பொருட்களை தானியங்கி தொழில் நுட்பத்திற்கு மாற்றியுள்ளார் நவீன்.


பெயரில் மட்டுமல்ல. செயலிலும் நவீனங்கள் புரிபவர் இந்த நவீன். 6ஆம் வகுப்பு படிக்கும் போதே ஜேம்ஸ்பாண்ட் படக்காட்சிகளால் ஈர்க்கப்பட்ட நவீன், பள்ளிப்படிப்பை முடிக்கும் போதே கம்ப்யூட்டர் பழுது நீக்கும் தொழிலை கற்றுக்கொண்டிருக்கிறார். இணையதளத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி தனது வீட்டை ஸ்மார்ட் ஹவுசாகவும் மாற்றியிருக்கிறார் நவீன்.


பொறியியல் பட்டதாரியான இவர், லித்தியம் அயன் பேட்டரி மூலம் மின் சுவர் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். நவீன். கல்லூரி படிப்பை முடிக்கும் போதே 14 நிறுவனங்கள் இவருக்கு பணி ஆணைகளை வழங்கியிருக்கின்றன. அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளராக ஆக வேண்டும் என்ற தனது லட்சியத்தை மட்டுமே மனதில் வைத்து பயணித்திருக்கிறார்.

நவீன் தன்னுடைய 9 ஆண்டுகள் தொடர் போராட்டத்தில் தற்போது வெற்றியும் அடைந்துவிட்டதாக பெருமிதம் கொள்ளும் நவீன், இளம் கண்டுபிடிப்பாளர்கள் பலருக்கும் முன்மாதிரி என்றே கூறலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com