ஸ்மார்ட்போன் வச்சிருக்கீங்களா? கண்டிப்பா நீங்க படிச்சே ஆகணும்

ஸ்மார்ட்போன் வச்சிருக்கீங்களா? கண்டிப்பா நீங்க படிச்சே ஆகணும்
ஸ்மார்ட்போன் வச்சிருக்கீங்களா? கண்டிப்பா நீங்க படிச்சே ஆகணும்
Published on

தொழில்நுட்பம் வளர வளர மனிதர்கள் சக மனிதர்களோடு சேர்ந்து இருப்பது என்பது அரிதாக மாறி வருகிறது. அதனால்தான் இப்போதெல்லாம் சுற்றுலா போவது என்பது எல்லாரும் கட்டாயமாக்கிவிட்ட விஷயமாக மாறிப் போயிருக்கு. ஸ்மார்ட் போன் நம்ம எப்படியெல்லாம் பாதிக்கிது தெரியுமா?

1. பஸ்லயும், ட்ரெயின்லயும்,ஏன் எங்கயாவது கொஞ்ச நேரம் நிக்கிற மாதிரி நேரம் இருந்தா, உடனே நம்ம கை  ஃபோன் எங்க இருக்குணுதான் தேடுது. சமீபத்திய ஆய்வுப்படி, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 150 முறை போனை எடுப்பதும் வைப்பதுமாக மனிதர்கள் இருக்காங்க என்பது தெரிய வந்திருக்கு. இது சராசரி மட்டுந்தான். 1000 முறை கூட எடுக்குற ஆட்கள் இருக்காங்க.

2. 2008-ல ஸ்காட்லாந்து பல்கலைகழகம் ஒன்று நடத்திய ஆய்வில் 55 வயது வந்தவர்கள் எல்லாருக்கும் கனவுகள் கறுப்பு வெள்ளையில வரும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. ஆனால், இப்போ உள்ள இளைஞர்கள் எல்லாருக்கு கனவுகள் கலர்ல வருது.

3. சமீபத்திய ஆய்வுப்படி, அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபர்கள் தங்களை இழந்ததை போன்று ஒரு உணர்வுக்கு செல்வதாகவும், நாளடைவில் அதுவே ஒரு பயம் கலந்த உணர்வாக மாறி மனநிலையை பாதிப்பதாக அமைகிறது.

4. சமீபத்திய விஞ்ஞானமும் அதன் வளர்ச்சிகளும் எதை பாதித்ததோ இல்லையோ மனிதனின் ஞாபக சக்தியை முழுமையாக பாதித்திருக்கிறது. அதோடு தூக்கத்தை கெடுப்பதாக அமைந்தும் விடுகிறது. அதாவது சாதாரண கணக்குகளுக்குக் கூட மொபைல் கால்குலேட்டரை பயன்படுத்துதலும், இரவு 2 மணி கூட சாதாரணமாக விழித்திருப்பதும் நிகழ்கிறது.

5. அடிக்கடி மொபைல் பயன்படுத்திக் கொண்டே இருப்பதால், யாருமே அழைக்காத போது  ரிங்க்டோன் ஒலிப்பது போலவும், செல்போன் Vibrate ஆவது போலவும் உணர்தல் நிகழும். இதனால் அடிக்கடி ஃபோனை எடுத்து பார்க்கும் நிலை ஏற்படும்.

6. அடுத்தது “பாப்கார்ன் ப்ரைன்”. அதாவது மொபலை பயன்படுத்திக் கொண்டே இருப்பதால், அடுத்து என்ன நடக்கும், அடுத்து என்ன நடக்கும் என மனம் நினைத்துக் கொண்டே இருக்கும். மெசேஜ் வந்தால் கண்டிப்பாக ஒலி எழும்பும் என தெரிந்தும் வந்துவிட்டதா என அடிக்கடி பார்க்கும் நிலை. எந்தச் சத்தமும் இல்லாமல் போன் இருந்தும், ஏதோ நடப்பது போல உணர்ந்து கொண்டே இருப்பது.

7. அடுத்தது மிக முக்கியமானது. மன அழுத்தம். ஸ்மார்ட்போன் மற்றும் இதர தொழில்நுட்பங்களால் மன அழுத்தம் அதிகமாக உருவாகிறது. பல சமயங்களில் அதீத கோபம் கொள்ளும் சிலர், தற்கொலை செய்யும் நிலைக்குக் கூட சென்று விடுகிறார்கள். 10 பேர் உடனிருந்தும் செல்போனை நோண்டிக் கொண்டே இருப்பவர்களை பார்த்தால், இது தெரியும்.

8. நேரம் தெரியாமல் செல்போனையும், இணையத்தையும் பயன்படுத்துபவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் காது கொடுத்து கேட்க மாட்டார்கள். குறிப்பாக 5-10 நிமிடத்திற்கு மேல் அவர்களால் எதையும் தொடர்ந்து கவனிக்க முடியாது. மேலும் 5 மணி நேரத்துக்கு அதிகமாக செல்போனையை தொடர்ந்து பயன்படுத்துவதால், தங்களோடு இருப்பவர்களின் பெயரை கூட மறந்து விடும் நிலை உருவாகும் என்கிறது ஆய்வு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com