ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு முறையில் தற்போதுள்ள நடைமுறையை மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள முறைப்படி, சிவில் சர்வீஸ் பணியின் கீழ்வரும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 மத்திய அரசு பணிகளுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) ஆண்டுதோறும் தேர்வு நடத்துகிறது. அதன்படி தேர்வாளர்களுக்கு முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கியத் தேர்வு நடத்தப்படும். இதைத்தொடர்ந்து தேர்வில் தகுதிபெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, இரு தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும். அதன்படி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆனால் தற்போது மத்திய அரசு திட்டமிட்டுள்ள புதிய முறைப்படி, முக்கியத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரிக்கு செல்ல வேண்டும். அங்கு அவர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும்.
அந்த பயிற்சியில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும், இதற்கு முன்னர் அவர்கள் பெற்ற முக்கிய மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த முறையால் கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவர்கள் கடும் பாதிப்படைவார்கள் என கல்வியாளர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் புதிய தலைமுறையிடம் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறும் போது, “ஆண்டுதோறும் அடிப்படை பயிற்சியின் துவக்கத்திற்கு முன்பே, சிவில் சர்விஸ் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி ஒதுக்கீடு மற்றும் பணியிட ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. பிரதமர் அலுவலகமானது நடப்பாண்டு முதலே, பின்வரும் ஆலோசனைகள் மற்றும் அமல்பாட்டிற்காக, அவற்றின் மீதான அத்தியாவசியமான நடவடிக்கைகளை கருத்தில் கொள்ள
விருப்பம் தெரிவித்துள்ளது.
ஏற்படும் விளைவுகள் :