“என் மதத்தை காப்பாற்ற கவுரி லங்கேஷை கொல்ல சொன்னார்கள்” - பிடிபட்ட பரசுராம் விசாரணையில் பகீர் !

“என் மதத்தை காப்பாற்ற கவுரி லங்கேஷை கொல்ல சொன்னார்கள்” - பிடிபட்ட பரசுராம் விசாரணையில் பகீர் !
“என் மதத்தை காப்பாற்ற கவுரி லங்கேஷை கொல்ல சொன்னார்கள்” - பிடிபட்ட பரசுராம் விசாரணையில் பகீர் !
Published on

தன்னுடைய மதத்தை காப்பாற்ற கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்றதாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட பரசுராம் வாஹ்மோர் சிறப்பு புலனாய்வு குழு  விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பத்திரிக்கையாளர் மற்றும் செயற்பாட்டாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கை கர்நாடக சிறப்பு விசாரணைக் குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். வழக்கில் திருப்பமாக வடக்கு கர்நாடகாவில் உள்ள விஜயபுரா மாவட்டத்தில் வைத்து முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்படும் பரசுராம் வாஹ்மோர் என்பவரை போலீசார் கைது செய்தனர். பரசுராமிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்றதை அவர் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. 26 வயதான பரசுராம் வாஹ்மோர் விஜயபுரா மாவட்டத்தின் சிந்தகி நகரைச் சேர்ந்தவர். அவர் ஸ்ரீ ராம் சேனே அமைப்பை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

விசாரணையில் பரசுராம் சொன்னதாக கூறப்படும் தகவல்கள்:-

“என்னுடைய மதத்தை காப்பாற்ற ஒருவரை கொல்ல வேண்டும் என்று கடந்த மே மாதம் 2017ம் ஆண்டு என்னிடம் சொன்னார்கள். நானும் ஒப்புக் கொண்டேன். யாரை கொல்லப் போகிறேன் என்று அப்போது எனக்கு தெரியாது. அந்தப் பெண்ணை கொன்றிருக்க கூடாது என்று இப்பொழுது வருத்தப்படுகிறேன்.

கவுரி வீட்டினை மூன்று நாட்கள் நோட்டமிட்டோம்

முதலில் நான் ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து ஒருவர் என்னை பைக்கில் வெளியே அழைத்துச் சென்றார். கவுரி வீட்டை காட்டினார் அவர். பின்னர், மற்றொருவர் என்னை பெங்களூரில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் மற்றொரு நபர் கவுரி லங்கேஷ் இருக்கும் ஆர்.ஆர்.நகர் வீட்டிற்கு திரும்பவும் அழைத்துச் சென்றார். மீண்டும் அறைக்கு அழைத்து வந்தார். மீண்டும் அன்று மாலை கவுரி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். முந்தைய நாள் என்னை அழைத்துச் சென்றவரே அப்பொழுதும் கூட வந்தார். அன்றே கவுரி லங்கேஷை கொல்ல வேண்டும் என்று என்னிடம் கூறினர். ஆனால், அவர் வேலை முடிந்து வீட்டிற்கு தாமதமாகவே வந்தார். 

கவுரியை சுட்டது எப்படி?

செப்டம்பர் 5ம் தேதி மாலை 4 மணிக்கு பைக்கில் என்னை அழைத்துச் சென்றவர் என்னிடம் ஒரு துப்பாக்கி கொடுத்தார். அன்று மாலை கவுரி வீட்டிற்கு நாங்கள் சென்றோம். நாங்கள் சரியான நேரத்திற்கு அங்கு சென்றிருந்தோம். கேட்டிற்கு முன்பாக காரை நிறுத்தினார். கேட் உட்புறமாக திறக்கப்பட்டது. நான் அவரை நோக்கிச் சென்றேன். லேசாக இருமினேன். அப்பொழுது என்னை நோக்கி அவர் திரும்பினார். அவரை நோக்கி நான்கு முறை நான் சுட்டேன். பின்னர் அங்கிருந்து அறைக்கு திரும்பி, அன்றிரவே பெங்களூருவை விட்டு வெளியேறினோம்” இவ்வாறு எஸ்.ஐ.டி விசாரணையில் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

பரசுராம் உடன் வெவ்வேறு நேரங்களில் சுமார் 3 பேர் இருந்திருக்கிறார்கள். ஒருவர் பரசுராமை பெங்களூருக்கு அழைத்து வந்தவர். மற்றொரு பைக்கில் கவுரி லங்கேஷ் வீட்டிற்கு மூன்று நாட்களில் மாலை நேரங்களில் அழைத்துச் சென்றவர். மூன்றாவது நபர் செப்டம்பர் 4ம் தேதி கவுரி வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்றவர். ஆனால், அந்த மூன்று பேரும் யார் என்றே தெரியாது என்று விசாரணையில் பரசுராம் கூறியுள்ளார்.

“கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்ற கும்பலுக்கு பின்னால் குறைந்த பட்சம் 5 மாநிலங்களில் நெட்வொர்க் உள்ளது. அதில் குறைந்த பட்சம் 60 பேர் இருக்கிறார்கள்” என்று எஸ்.ஐ.டி விசாரணையில் உள்ள மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகின்றார். அதேபோல், கல்புர்கி மறு கோவிந்த் பன்சாரியை கொன்ற அதே துப்பாக்கி தான் கவுரி லங்கேஷ் கொல்லவும் பயன்படுத்தப்பட்டதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com