துணிவகையிலான முகக்கவசங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? மருத்துவர் விளக்கம்

துணிவகையிலான முகக்கவசங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? மருத்துவர் விளக்கம்
துணிவகையிலான முகக்கவசங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? மருத்துவர் விளக்கம்
Published on

துணி வகையிலான முகக்கவசங்களை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் மிகப்பெரிய ஆயுதமாக முகக்கவசம் உள்ளது. என் 95 மாஸ்க்கை பயன்படுத்த மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்த போதிலும், அதன் விலை காரணமாக அனைவராலும் அந்த முகக்கவசத்தை பயன்படுத்த முடிவதில்லை.

ஆதலால், பெருவாரியான சாமானிய மக்கள் மருந்தகங்களில் கிடைக்கும் ஒரு நாள் மட்டும் உபயோகிக்க கூடிய முகக்கவசம் அல்லது துணிவகையிலான முகக்கவசங்களை பயன்படுத்துகின்றனர்.

இதிலும் அதிகப்படியான மக்கள் துணிவகையிலான முகக்கவசங்களை பயன்படுத்துகின்றனர். ஆகையால் துணி வகையிலான முகக்கவசங்களை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து மருத்துவர் சாந்தி ( செயலாளர், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்) அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் அளித்த விளக்கங்கள் பின்வருமாறு:-

1.என் - 95 முகக்கவசங்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. எந்த வகையான முகக்கவசமாக இருந்தாலும் அதை நான்கு முதல் ஐந்து மணிவரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

2. மருந்தகங்களில் கிடைக்கும் முகக்கவசங்களில் மூன்று லேயர்கள் இடம்பெற்றிருக்கும். அந்த லேயர்கள் அதிகப்படியான கிருமிகள் நம்மை அண்டுவதை தடுக்கும். இதை நாம் துணிவகையிலான முகக்கவசங்களிலும் கொண்டுவரலாம். எப்படி என்றால் துணிவகையிலான முகக்கவசங்களை தயாரிக்கும்போது, அதில் மூன்று லேயர்கள்( மடிப்புகள்) இருக்குமாறு தயாரிக்க  வேண்டும்.

3. வீட்டில் ஒருவர் பயன்படுத்தும் துணிவகையிலான முகக்கவசத்தை மற்றொருவர் பயன்படுத்தக்கூடாது.

4. வேலை முடிந்து வந்ததும், சோப்பு கரைசலில் முகக்கவசத்தை போட்டு அரைமணி நேரம் ஊறவைத்து அதன் பின்னர் துவைத்து பயன்படுத்த வேண்டும்.

5. அதிக எண்ணிக்கையிலான முகக்கவசங்களை வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதை துவைத்து பயன்படுத்த வசதியாக இருக்கும்.

6. முகக்கவசங்களை அடிக்கடி கழற்றி பாக்கெட்டில் வைத்து பயன்படுத்துவதோ அல்லது மேசை மீது வைத்துவிட்டு  பயன்படுத்துவதோ கூடாது. காரணம் முகக்கவசத்தின் வெளிப்புற பகுதியில்தான் அதிக கிருமிகள் தங்கியிருக்கும். ஆகவே அடிக்கடி முககவத்தை கழற்றி அணியும்போது அந்த கிருமிகள் நமது கையில் படிய வாய்ப்பிருக்கிறது. அதற்கு பதிலாக சிறிய பிளாஸ்டிக் பாக்ஸை வைத்து அதில் முகக்கவத்தை வைத்து பயன்படுத்துதல் நலம்.

7. அதேபோல் பேசும்போதோ அல்லது சாப்பிடும்போதோ முகக்கவசத்தை கழுத்துப்பகுதியில் இறக்கக்கூடாது. காரணம் கழுத்துப்பகுதியில் உள்ள கிருமிகள் முகக்கவசத்தின் மீது பட்டு அது நமக்கு படர வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் சாப்பிடும்போது முகக்கவசத்தை முழுமையாக கழற்றி வைத்துவிட்டு சாப்பிட வேண்டும்.

8.ஒரு முகக்கவசத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதால் சாப்பிட்ட பின்னர் மற்றொரு முகக்கவசத்தை மாற்றிக்கொள்ளலாம். எதிர்பாராத விதமாக முக;fகவசம் ஈரமாகி விட்டால் அந்த முகக்கவத்தை பயன்படுத்த வேண்டாம். 

9. முகக்கவசத்தை துவைக்காமல் பயன்படுத்த கூடாது.

10. முகக்கவசம் அணிந்திருக்கும்போது தும்மல் வந்தால், முக;fகவத்தை இறக்கி தும்மக்கூடாது.

11. குளிர்சாதன அறைகளில் வேலை செய்வோர், இரண்டு முக;fகவசங்களை கூட அணிந்து கொள்ளலாம். அந்த முறை உங்களின் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்யும். 

12. வீடுகளில் தனியாக இருக்கும்போது முகக்கவசம் அணிய தேவையில்லை.

13. முகக்கவசத்தின் மூலம் நாம் வாய் மற்றும் மூக்கை தேவையில்லாமல் தொடுவதை தவிர்க்க முடியும்.

- கல்யாணி பாண்டியன் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com