நீரிழிவு நோயாளிக்கான பேருதவி... இன்சுலின் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

நீரிழிவு நோய் வந்த ஒருவருக்கு அவர்களின் நோயின் வீரியத்தை கணக்கிட்டு மருத்துவர்கள் மருந்துகள் (இன்சுலின்) வழங்குகிறார்கள். இது தற்காலிக தீர்வுதானே தவிர நிரந்தர தீர்வு கிடையாது.
இன்சுலின்
இன்சுலின்PT
Published on

நீரிழிவு நோயாளிக்கு முதன்முறையாக இன்சுலின் செலுத்தப்பட்டது எப்போது?

மனிதர்களுக்கு சரி செய்யமுடியாத நோய்களில் ஒன்று நீரிழிவு நோய். நீரிழிவு நோய் வந்த ஒருவருக்கு அவர்களின் நோயின் வீரியத்தை கணக்கிட்டு மருத்துவர்கள் மருந்து (இன்சுலின்) வழங்குகிறார்கள். இது தற்காலிக தீர்வுதானே தவிர நிரந்தரத் தீர்வு கிடையாது.

மனிதர்களின் உடலில் கணையம் என்ற ஒரு பகுதி இருக்கும். இதில்தான் மனிதன் உட்க்கொள்ளும் உணவிற்கு ஏற்ப இன்சுலினானது சுரக்கும். இப்படி சுரக்கும் இன்சுலின் நாம் உட்கொள்ளும் உணவில் கலந்து, அதிலிருந்து தேவையான சர்க்கரையை எடுத்து இரத்தத்துடன் கலக்கும் வேலையை செய்கிறது.

கணையமானது சரிவர வேலைசெய்யவில்லை என்றால் இன்சுலின் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். அப்போது ஊசி மூலமாகவோ அல்லது மாத்திரையின் மூலமாகவோ தேவையான அளவு இன்சுலின் உடலில் செலுத்தப்பட்டு தற்காலிகமாக நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வருவர். இன்று நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் ஒரு முக்கியமான மருந்து.

இத்தகைய இன்சுலின் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

1889-ஆம் ஆண்டில், ஜெர்மனியைச் சேர்ந்த இரண்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்களான ஆஸ்கர் மின்கோவ்ஸ்கி மற்றும் ஜோசப் வான் மெரிங், இருவரும், நீரிழிவு நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார்கள்.

அவர்களின் முதல் ஆராய்சியாக நாயை கையில் எடுத்தனர். கணைய சுரப்பி எனப்படும் பேன்க்ரியாஸை நாய்களிடமிருந்து அகற்றியபோது, கணையம் இல்லாததால் நாய் நீரிழிவு நோய் ஏற்பட்டு இறந்துவிட்டதாம். ​​​​ இதுபோல் பல நாய்களிடம் ஆராய்ச்சியை மேற்கொள்ளும்போது, கணையத்தில் தான் இன்சுலின் சுரக்கிறது என்பதை மருத்துவர்கள் இருவரும் கண்டுபிடித்தனர். ஆனால் அதற்குமேல் அவர்களால் அந்த கண்டுபிடிப்பை முன் எடுத்து செல்ல இயலவில்லை.

இன்சுலின்
விண்வெளியில் அடுத்த மைல்கல்... சூப்பர் நோவாவை கண்டுபிடித்த XPoSat; அசத்திய இஸ்ரோ!

1921-ஆம் ஆண்டில், ஃபிரடெரிக் பான்டிங் என்ற இளம் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் அவரது உதவியாளர் சார்லஸ் பெஸ்ட் ஆகியோர் இணைந்து இன்சுலின் கண்டுபிடிப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினர்.

ஃபிரடெரிக் பான்டிங் மற்றும் அவரது உதவியாளர் சார்லஸ் பெஸ்ட் ஆகியோர், தங்களது சக ஊழியர்களான ஜே.பி. கோலிப் மற்றும் ஜான் மேக்லியோட் ஆகியோரின் உதவியுடன், கால்நடைகளின் கணையத்திலிருந்து எப்படி இன்சுலினை பிரித்தெடுப்பது என்பதை கண்டறிந்து, இறுதியில் ஒரு தூய்மையான இன்சுலினை விலங்குகளின் கணையத்திலிருந்து பிரித்து எடுத்தனர்.

இப்படி கண்டுபிடிக்கப்பட்ட இன்சுலினை மனிதனுக்கு செலுத்தி வெற்றிபெற நினைத்த மருத்துவர்கள், முதன்முறையாக, ஜனவரி 11, 1922-ல், நீரிழிவு நோய் தாக்கிய 14 வயதான சிறுவனின் உடலில் செலுத்தினர். இச்சிறுவன்தான் முதன்முதலில் இன்சுலின் ஊசியைப் பெற்ற முதல் நபர்.

சிறுவனின் உடல் முன்னேற்றத்தைக் கண்டதும், பல ஆண்டுகள் முயற்சியில் வெற்றியடைந்த மருத்துவர்கள், பல உயிர்களை இன்சுலின் மூலம் காப்பாற்ற ஆரம்பித்தனர். ஆனால் இவர்கள் கண்டுபிடித்த இன்சுலின் பல நோயாளிகளுக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தியது. மீண்டும் 1978-ல் ஈ.கோலி பாக்டீரியாவைப் பயன்படுத்தி இன்சுலின் உற்பத்தி செய்யப்பட்டது. இன்று இந்த இன்சுலின்தான் பல நீரிழிவு நோயாளிகளின் உயிரை காப்பாற்றி வருகிறது.

NGMPC22 - 147

தற்போது இன்சுலின் பல வடிவங்களில் கிடைக்கிறது, நீரிழிவு நோயாளிகள் தங்கள் தனிப்பட்ட தேவைகள் மற்றும் வாழ்க்கை முறைகளுக்கேற்ப இன்சுலின் எடுப்பதற்கான பல்வேறு வழிகளில் உள்ளது.

பேனாக்கள் முதல் பம்ப்கள் வரை, இன்சுலின்கள் பல உருவம்கொண்டுள்ளது. இது நீரிழிவு நோய்க்கு ஒரு தீர்வாக இல்லாவிட்டலும் உயிரை காக்ககூடியவையாக் இன்சுலின் இருக்கிறது.

(சங்கரேஸ்வரி)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com