தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசு, புத்தாடையைப் போல் பலகாரங்களும் தான். சிலருக்கு பலகாரம் செய்ய மிகவும் பிடிக்கும். ஆனால் அதற்கான ஐடியாக்கள் வராது. அப்படியே வந்து யூடியூப் பார்த்தால் ஒரு பலகாரத்திற்கு பல ரெசிபிகள் இருக்கும். இதில் எது சரி? எப்படி செய்வது என்று குழம்பி கடைசியில் நாம் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று போல பலகாரங்கள் சொதப்பலுடன் முடிந்திருக்கும்.
ஆகையால் இந்த தீபாவளிக்கு ஈஸியான அதே நேரத்தில் சுவையான இனிப்பு பலகாரங்கள் செய்வது எப்படி என்பதை நாங்கள் உங்களுக்கு தெள்ளத்தெளிவாக எடுத்து சொல்லி இருக்கிறோம். அதன் படி செய்து தீபாவளியை எங்களுடன் சேர்ந்து அசத்தலாம்.
‘கண்ணா லட்டு திங்க ஆசையா?” என்பது போல லட்டு பிடிக்காதவர்கள் யாரும் கிடையாது. லட்டில் மோத்தி லட்டு, பூந்தி லட்டு இப்படி பல வகை லட்டு உண்டு. தமிழ்நாட்டு ரெசிபியான பூந்தி லட்டு செய்வது எப்படி என்பதை நாம் இங்கு பார்க்கலாம்.
கால் கிலோ கடலைமாவை எடுத்துக்கொண்டு அதை சலித்துக்கொள்ள வேண்டும்
அதனுடன் பேக்கிங் சோடா ஒரு சிட்டிகை மைதா மாவு ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து தேவைப்பட்டால் லட்டு கலரையும் சேர்த்து தோசைமாவு பதத்தில் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு எண்ணெய் காய்ந்ததும் பூந்தி கரண்டியில் இந்த மாவை ஊற்றினால் எண்ணெயில் பூந்தியாக வரும். இதை அதிக நேரம் எண்ணெயில் வேகமைக்காமல் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே எடுத்துவிடவேண்டும்.
இப்படி கரைத்து வைத்த மாவை பூந்தி செய்து முடித்ததும், வேறொரு அடுப்பில் கடாயை வைத்து கால் கிலோ சக்கரையை ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைந்துக்கொள்ளவேண்டும்
தேவைப்பட்டால் இத்துடன் கலர் சேர்த்துக்கொள்ளலாம் இத்துடன் முந்திரி உலர் திராச்சை குங்குமப்பூ ஏலக்காய் பொடி போட்டு கலந்துக்கொள்ள வேண்டும்.
சக்கரைப்பாகு ஒரு கம்பிப்பதம் வரும் சமயம் அடுப்பை அணைத்துவிட்டு, ஏற்கனவே செய்து வைத்திருந்த பூந்தியை பாகில் போட்டு கிளரி பதினைந்து நிமிடம் ஊற விடவேண்டும்.
இச்சமயத்தில் பூந்தி சக்கரைப்பாகில் நன்கு ஊறி மெத் என்று இருக்கும். பிறகு கையில் நெய் தடவி லட்டாக உருட்டலாம்.
டிப்ஸ்: இதில் பூந்தியில் எண்ணெய் அதிகமாக இருந்தால் ஒரு டிஸ்யூ பேப்பரில் பூந்தியை போட்டால் பூந்தியில் இருக்கும் எண்ணையை டிஸ்யூ பேப்பர் இழுத்துக்கொள்ளும் அதன் பிறகு ஜீராவில் போடலாம்.
ஜீராவில் போட்ட பிறகு பூந்தி ஊறிய பின் உருண்டையாக உருட்ட வரவில்லை என்றால் சிறிது வெந்நீர் தெளித்து பூந்தியை உருட்டலாம்
இது மிகவும் ஈஸியான ஒரு பலகாரம்.
பம்பே ரவை கால் கிலோ எடுத்து வெறும் கடாயில் நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும். பிறகு சூடு ஆறியதும் மிக்ஸியில் நன்கு பொடித்துக்கொள்ளவேண்டும்.
அதே போல் சக்கரையும் ரவையின் அளவு கால்கிலோ எடுத்துக்கொண்டு மிக்ஸியில் நன்கு பொடி செய்துக்கொள்ள வேண்டும்.
பிறகு ரவைப்பொடி, சக்கரைப்பொடியை ஒன்றாக கலந்துக்கொண்டு, கால் கிலோ நெய்யில் முந்திரி ஏலக்காய், வறுத்து அத்துடன் கலந்து உருண்டையாக பிடிக்கலாம்.
இந்தவகை லட்டு திருநெல்வேலி பக்கம் மிகவும் பிரபலம்.
சிறு பருப்பு (பாசிப்பருப்பு) 100 கிராம், பொட்டுக்கடலை (தேவைப்பட்டால் அல்லது பாசி பருப்பே போதும்) கிராம் 100 சரிசமமாக எடுத்து கடாயில் வறுத்துக்கொண்டு மிக்ஸியில் பொடி செய்துக்கொள்ள வேண்டும்.
அதே அளவு சக்கரையை மிக்ஸியில் பொடித்துக்கொண்டு நெய்யில் முந்திரி, ஏலக்காய் சேர்த்து மாவுடன் கலந்து உருண்டையாக பிடிக்கலாம். மாலாடு ரெடி.
இனிப்பிற்கு ஏற்ப காரம் இருந்தால் தான் தீபாவளி சிறக்கும் அல்லவா..
சுவையான காரமான ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி என்பதையும் பார்க்கலாம்.
கடலை மாவு கால் கப்,
அசிரி மாவு கால் கப்,
மிளகாய் தூள்,
உப்பு,
பெருங்காயம்
இவையனைத்தையும் சேர்த்து காய்ந்த எண்ணெய் ஒரு குழி கரண்டி அல்லது வெண்ணெய் சேர்த்து மாவை நன்கு கிளரிக்கொண்டு தண்ணீர் சேர்த்து பிசைந்து (சப்பாத்திமாவு பதத்திற்கு) எண்ணெய் காய்ந்ததும் அச்சில் மாவை போட்டு பிழிந்து எடுத்தால் கரகர ரிப்பன் பக்கோடா ரெடி.
என்னங்க... ஈஸியான எளிமையான பலகாரம் தானே... நீங்களும் செய்து பார்த்து கமெண்டில் உங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள்..