பனி காலத்துக்கு "டாட்டா", வெயில் காலத்துக்கு "வெல்கம்" ! அதான் ஹோலி பண்டிகை

பனி காலத்துக்கு "டாட்டா", வெயில் காலத்துக்கு "வெல்கம்" ! அதான் ஹோலி பண்டிகை
பனி காலத்துக்கு "டாட்டா", வெயில் காலத்துக்கு "வெல்கம்" ! அதான் ஹோலி பண்டிகை
Published on

பனி காலத்துக்கு பிரியா விடை கொடுத்து வெயில் காலத்தை வரவேற்கும் விதமான ஒரு கொண்டாட்டம்தான் ஹோலி பண்டிகை. இயற்கையோட பருவக்கால மாற்றத்தை வரவேற்பதுதான் இந்தப் பண்டிகையின் தாரக மந்திரம். இந்தப் பண்டிகை அரங்கபஞ்சமி தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் வட மாநிலங்களில் வண்ணமயமான ஹோலி பண்டிகை, குஜராத் மாநிலத்தில் 5 நாட்கள் கொண்டாடப்படும். மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே ஹோலிப் பண்டிகையின் முக்கியக் குறிக்கோளாகும். 

இந்தப் பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும். இயற்கையின் மாற்றத்தை கொண்டாடும் பண்டிகை என்றாலும், இதற்கும் புராணக் கதைகள் இருக்கின்றன. கிருஷ்ண பகவான் தன் இளமை பருவத்தில் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை என்று வட மாநிலத்தவர்கள் நம்புகின்றனர். இப்பொழுதும் ஹோலிப் பாடல்களில் கிருஷ்ணரின் லீலைகளையும், குறும்புகளையும் விவரித்து பாடுவர்.

இந்தப் பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு. இந்தப் பண்டிகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, 'பிச்கரிஸ்' என்னும் வண்ண நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயில், 'குலால்' என்னும் பல வண்ண நிறங்களில் இருக்கும் சிறுசிறு துகள்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்வர்.

ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னிதேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படும். அப்போது ஹோலிகா தகனமாவதை ஒட்டியும்,  பிரகலாதன் உயிர் பெற்று எழுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாகக்குரல் எழுப்புவார்கள்.

தேங்காயுடன் பூஜை செய்யப்பட்ட இனிப்பு வகைகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள்  மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளைத் தூவி, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.

ஹோலிப் காதலை வெளிப்படுத்தக் கூடிய பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை வரவழைத்து, அவர்கள் முகங்களில் சாயங்களை பூசி, தங்களின் அன்பை வெளிப்படுத்துகின்றனர். வடமாநிலங்களில் மிகச் சிறப்பாக கொண்டாடுவதைப் போல், தென்னிந்தியாவில் வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் இடங்களில் ஹோலிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com