இந்த அதிசயங்களை தெரியுமா! பூமியின் இந்த இடங்களில் எல்லாம் புயியீர்ப்பு விசை இல்லை!

இந்த அதிசயங்களை தெரியுமா! பூமியின் இந்த இடங்களில் எல்லாம் புயியீர்ப்பு விசை இல்லை!
இந்த அதிசயங்களை தெரியுமா! பூமியின் இந்த இடங்களில் எல்லாம் புயியீர்ப்பு விசை இல்லை!
Published on

புவியீர்ப்பு விசையும் பூமியில் அது செயல்படாத இடமும்

நாம் ஒரு பொருளைப்போட்டால் அது கீழே விழுகிறது. அதற்கு காரணம் புவியீர்ப்பு விசை என்பது தெரியும். அதென்ன புவியீர்ப்பு விசை? பூமியில் மட்டும் தான் இந்த புவியீர்ப்பு விசை இருக்கிறதா? அல்லது எல்லா கிரகங்களிலும் இருக்கிறதா? இப்படி பலபல கேள்விகள் நம்முள் எழலாம். எல்லா கிரகங்களிலும் இவ்விசையானது செயல்படுகிறது. ஆனால், அதற்கான சதவிகிதங்கள் மாறுபடலாம். இதை பற்றி பின்பு பார்க்கலாம். இப்பொழுது, இப்பூமியில் பல மர்மங்கள், ஆச்சர்யங்கள் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒன்று தான் இந்த புவியீர்ப்பு ஆற்றல். நம்முடைய பூமியின் ஒருசில இடங்களில் புயீர்ப்பு ஆற்றல் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் அதை பற்றிய விரிவான கட்டுரை தான் இது.

சரி இப்பொழுது நாம் விஷயத்திற்கு வரலாம்.

அண்ட சராசரத்தையே ஆட்டி படைக்கின்ற இந்த ஈர்ப்பு விசையானது, இந்த பூமியில் ஒரு சில இடங்களில் இல்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அதை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்கப்போகிறோம்.

1. மகாராஷ்டிர மாநிலம், கொங்கன் கடலோரப் பகுதியை ஒட்டிய டெக்கான் மலைப்பகுதியில் இருக்கும் அருவியில் தண்ணீர் கீழே விழுவதற்கு பதில் மேல் நோக்கி பாய்கிறது. இது பார்ப்பதற்கு அதி அற்புதமான ஒரு காட்சியாய் விரிகிறது. ஆனால் அருவி என்றால் தண்ணீர் கீழ்தான் கொட்டவேண்டும் அல்லவா? இங்கு மட்டும் ஏன் அருவி மேல்நோக்கி பாய்கிறது?

2. மவுண்ட் அராகட்ஸ், அர்மேனியா

இந்த பகுதி துருக்கி மற்றும் அர்மேனியா எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ளது. இங்கு காரை நாம் நிறுத்தி வைத்தால், எந்த உதவியும் இன்றி தானாக மலை ஏறி செல்கிறதாம். மலையில் நிறுத்திய கார் கீழே இறங்கும் அதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. ஆனால் கீழே நிறுத்திய கார் மலை ஏறுகிறதென்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?

இதே போல ஃபுளோரிடாவில் இருக்கும் ஸ்போக் மலையிலிலும் இவ்வதிசயம் நிகழ்கிறது.

அமெரிக்கா என்னங்க இந்தியாவில் உள்ள மேக்னடிக் மலையில் கூட இவ்வதிசயம் நிகழ்கிறது. மேக்னடிக் மலை எவ்வளவு உயரம் தெரியுமா? கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 14 ஆயிரம் அடி உயரம்.

3. சாண்டா க்ரூஸ் (Santa Cruz Mystery Spot)

அடுத்ததாக அமெரிக்கா கலிஃபோர்னியா மாகாணத்தின் சாண்டா க்ரூஸ் பகுதி, இங்கு  சுமார் 150 அடி சுற்றளவில் ஒரு இடம் அமைந்துள்ளது. அங்கு புவியீர்ப்பு விசையின் மாறுபாட்டை உணரலாம் என்கிறார்கள், அங்கு கட்டும் வீடுகள் நேராக நிற்பதும் இல்லையாம். அந்த இடத்தில் நடப்பவர்களுக்கு அந்தரத்தில் பறப்பது போல் இருக்குமாம். திடீரென்று அங்கு கீழே விழுபவர்களும் உண்டாம். இதற்கு காரணமாக  வழிகாட்டிகள் கூறுவது என்னவென்றால்,  இங்கு ஒரு விண் கல் விழுந்து இவ்விடத்தில் ஒரு மாய, கண்களுக்குப்புலப்படாத ஒரு வட்டத்தை  விட்டுச்சென்றதால் இவ்விடத்தில் புவியீர்ப்பு சக்தி வேறு படுவதாக கூறுகிறார்கள். 

4. செயிண்ட் இக்னேஸ், அமெரிக்கா

”சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் பொழுது அடடா... “ ந்னு பாட்டு நியாபகம் வருதாங்க... ஆமாம் இங்கும் 300 அடி சுற்றளவில் புவி ஈர்ப்பு விசை வேலை செய்வதில்லை. அங்கு சென்றால் நம்மால் நேராக நிற்ககூட இயலாதாம். அதனால் சுற்றுலா செல்பவர்கள் சாய்ந்து நின்ற புகைப்படத்தை இங்கு நின்று எடுத்துக்கொள்ளலாம்.  சரி நேராக நின்றால் சாய்ந்த மாதிரி புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் , சாய்ந்து நின்றால்? என்று கேட்பது எனக்கு கேட்கிறது. சாய்ந்து நின்றால் கீழே விழுந்துவிடலாம். ஏனென்றால், இவ்விடத்தில் யாரோ நம்மை தள்ளுதல் போன்ற ஒரு உணர்வு ஏற்படுமாம்.

படம்: அங்கு நிற்கும் மனிதர்கள்

 ஓரிகான் வோர்டெக்ஸ், அமெரிக்கா

இங்கும் மேற்சொன்ன காரணங்கள்  தான்.  ஆகையால் புகைப்படத்தை பார்த்துவிட்டு வாருங்கள் அடுத்த இடத்திற்கு போகலாம்.

வேறொரு படம்

5. ஸ்பூக் ஹில் ஃப்ளோரிடா) :

இது ஒரு ஈர்ப்பு மலைப்பகுதி, இந்தியாவில் இருக்கும் மேக்னடிக் மலை போன்றது தான்.  இங்கு உங்கள் வாகனத்தை நிறுத்தினால் அது தானாக,  மலையை நோக்கி போகுமாம். அங்கு வாழ்ந்த அமெரிக்க பழங்குடியினர் தங்களது போக்குவரத்திற்காக குதிரைகளை பயன்படுத்தியவர்கள்  தங்கள் குதிரைகள் கீழ்நோக்கி இழுக்கப்படுவதை கவனித்தார்கள்,  அதனால் அப்பகுதி மக்களை  “ஸ்பூக் ஹில்” என்ற புனைப்பெயரை வைத்து அழைத்தனர்.

6. ஹூவர் அணை

அணை என்றால் நம் நினைவுக்கு வருவது அத்தனை மதகுகளிலிருந்தும் தண்ணீர் பாய்ந்து செல்லும் என்பது தானே? ஆனால் இங்கு ஒரு அணையில் நாம் கொட்டுகின்ற தண்ணீர் திவளைகளாக காற்றில் மிதக்குமாம். ஆம்..அமெரிக்காவில் இருக்கும் ஹூவர் அணையும் டெக்கான் மலைப்பகுதி போல் தான். இந்த அணைக்குச்சென்று, இந்த அணைக்கு சென்று பாட்டிலிலிருந்தோ அல்லது வேறு கலத்திலிருந்தோ தண்ணீரை கீழேக் கொட்டினால் தண்ணீர் கீழே விழுவதற்கு பதில் காற்றில் சிறு சிறு நீர் திவளையாக காற்றில் பறந்துக்கொண்டிருக்குமாம்.

7. கியாகிடியோ பகோடா

பர்மா மியான்மரில் உள்ள கியாகிடியோ பகோடா என்ற இடம் தான். இந்த மலையை தங்க மலை என்று கூறுகிறார்கள். இந்த மலையை புத்தமத வழிபாட்டு தலமாக இருக்கிறது. இதில் என்ன அதிசயம் என்று பார்த்தால். இந்த தங்க மலை உருண்டு விழுந்துவிடும் நிலையிலேயே 2500 வருடமாக இருப்பது தான். அட... இது ஏதோ ஒட்டிலில் தான் நிற்கிறது கொஞ்சம் தள்ளி விட்டால் விழுந்துவிடும் என்று நினைத்து அவ்விடத்திற்கு சென்று தள்ளிபார்த்தவர்கள் ஏமாற்றம் கொண்டு திரும்பியது தான் மிச்சம்.

இந்த உலகத்தில் பல அதிசயங்கள் நிறைந்திருந்தாலும், புவீஈர்ப்பு விசை நின்றுவிட்டால், நாமும் பூமியைத்தாண்டி விண்வெளியில் மிதந்துக்கொண்டிருப்போம். சில அதிசயங்கள் அதிசயங்களுடன் நின்றுவிடுவது தான் நமக்கு நல்லது.

ஜெயஸ்ரீ அனந்த்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com