19-ம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் பெண்கள் பள்ளி தொடங்கிய மகாராஷ்ட்டிராவைச் சேர்ந்த சாவித்ரிபாய்க்கு கூகுள் நிறுகூனம் அதன் தேடல் பக்கத்தில் படம் வெளியிட்டு கவுரவம் சேர்த்துள்ளது.
இந்தியாவில் இருந்த சாதி ஒடுக்குமுறைக்கும், இதர சமூகக் கொடுமைகளுக்கும் எதிராகப் போராடியவர்களுள், ஜோதிராவ் பூலேவும் அவரது மனைவி சாவித்ரிபாயும் முக்கியமானவர்கள். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சாவித்ரிபாய் 1831-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி பிறந்தார்.
சாதி ஒடுக்குமுறைகளும், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளும் தலைவிரித்தாடிய அந்தக் காலத்திலேயே பெண்களுக்கு ஆதவாக போராடிய சமூக சீர்திருத்தவாதி சாவித்ரிபாய். இவர் தனது கணவரான பூலேவுடன் இணைந்து பெண்களின் உரிமையை நிலைநாட்டும் பொருட்டு, 1948ல் புனேவில் பெண்கள் பள்ளியை அமைத்தார். தலித் பெண்களுக்காக அவர் தொடங்கிய பள்ளியில் சொல்லிக் கொடுப்பதற்கு ஆசிரியர்கள் வராததால், சாவித்ரிபாயே ஆசிரியையாகப் பணியாற்றினார்.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு மிகப்பெரிய முன்னோடியாக இருந்த சாவித்ரிபாய் தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்காவே போராடினார். 1897-ஆம் ஆண்டு இவர் காலமானர். இந்நிலையில் அவரின் பிறந்த தினமான ஜனவரி 3-ல் அவரை கவுரப்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் கூகுள் டூடுல் வெளியிட்டு கவுரப்படுத்தியுள்ளது.