கடிகார நேரத்தை அறிமுகப்படுத்தியவருக்கு கூகுள் கௌரவம்...!

கடிகார நேரத்தை அறிமுகப்படுத்தியவருக்கு கூகுள் கௌரவம்...!
கடிகார நேரத்தை அறிமுகப்படுத்தியவருக்கு கூகுள் கௌரவம்...!
Published on

ஒவ்வொரு நாடும் ஒரு கடிகார அமைப்பை பயன்படுத்தி வந்த நிலையில், கடிகாரம் மற்றும் அதற்கு 24 மணிநேரம் என வகுத்து ஒரே அமைப்புடைய நேர வடிவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் சான்போர்டு ஃபிளெமிங்.

இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தும் உலகளாவிய பொது நேரத்தை நடைமுறைபடுத்திய இவரின் 190 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு லோகோவை கூகுள் டூடுள் பக்கத்தில் வைத்து பெருமைப்படுத்தியுள்ளது.

சான்போர்டு ஃபிளெமிங் 1827 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார். இவர் கனடிய பசிபிக் ரயில்வே தலைமை பொறியாளராக பணியாற்றினார். கடிகாரத்தில் 24 நேரம்தான் என்பதையும் அதில் பகல், இரவு எனவும் வகுத்த சான்போர்டு ஃபிளெமிங்கைப் பாராட்டி 1897 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியால் ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது.

உருண்டை வடித்தில் உள்ள பூமியை கடக ரேகை, அட்ச ரேகை என கற்பனைகோடுகளால் பிரிப்பர். அதன் மையக்கோட்டை 0 டிகிரி என கருதினர். இதுதான் உலக நாடுகளின் நேரத்துக்கு ஆதாரமானது.

மையக் கோடு இங்கிலாந்து நாட்டில் உள்ள கிரீன்விச் என்ற நகரின் மீது செல்வதால் இந்த கோட்டிற்கு அந்த நகரின் பெயரை வைத்தார்கள். நேரத்திற்கு ‘கிரீன்விச் மெரிடியன் டைம்’ (GMT)என்று பெயர் வைக்கப்பட்டது. இதை சுருக்கமாக கிரீன்விச் நேரம் என்பர். 1847 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் கிரீன்விச் நேரத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ‘0’ டிகிரி ‘லாங்கிடியூடில்’ என்ன நேரம் காட்டுகிறதோ அதை மையமாக வைத்துத்தான் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் தங்கள் நாட்டின் நேரத்தை டிகிரி வித்தியாசத்துக்கு ஏற்றபடி சரியாக கணக்கிட்டு வைத்துக்கொள்கின்றன. இந்த நேரத்தை கணக்கிட சான்போர்டு ஃபிளெமிங் கடிகாரத்தில் 24 மணி நேரங்களை வகுத்துக் கொடுத்தார்.

கிரீன்விச் மெரிடியன் நேரப்படி உலக நாடுகளை 24 பகுதிகளாக பிரித்து பூமி ரேகையில் 15 டிகிரி கோண இடைவெளியில் ஒவ்வொரு நாட்டின் நேரங்களும் கணக்கிடப்படுகின்றன. அதன்படி, ஓவ்வொரு நாட்டின் நேரமும் மாற்றமடைகிறது. இன்று உலகம் முழுவதும் நேரத்தைக் கணக்கிடப் பயன்படுத்தும் 24 மணி நேர கடிகாரத்தைக் கண்டுபிடித்து உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார் சான்போர்டு ஃபிளெமிங்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com