“இன்று பூமியைத் தாக்கும் புவி காந்த புயல்” - என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

 “இன்று பூமியைத் தாக்கும் புவி காந்த புயல்” - என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
 “இன்று பூமியைத் தாக்கும் புவி காந்த புயல்” - என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
Published on

அமெரிக்க அரசின் விண்வெளி கண்காணிப்பு மையம், செப்டம்பர் 26 ஆம் தேதியன்று பூமியை ஒரு புவி காந்த புயல் தாக்கும் என்றும், அது செயற்கைக்கோள்கள் மற்றும் மின் கிரிட்களை பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளது. புவிகாந்த புயல் என்பது என்ன? அதன் பாதிப்புகள் என்ன? என்பது பற்றிய தொகுப்பு...

புவிகாந்த புயல்:

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் (SWPC), செப்டம்பர் 26 ஆம் தேதி ஜி1 அல்லது ஜி2 நிலை புவி காந்த புயல் ஏற்படும் என்ற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. புவி காந்த புயல் என்பது சூரிய புயலிலிருந்து வேறுபட்டது, ஆனால் இது சூரியக் காற்றால் ஏற்படுகிறது என்றும் தெரிவித்திருக்கிறது.

புவி காந்த புயல் என்பது பூமியின் காந்த மண்டலத்தில் இடையூறினை ஏற்படுத்துகிறது. சூரியக் காற்றிலிருந்து ஏற்படும் ஆற்றல் பரிமாற்றத்திற்குப் பிறகு பூமியைச் சுற்றியுள்ள விண்வெளி சூழலில் இந்த புவி காந்த புயல் நிகழ்கிறது. இத்தகைய சூழலால் ஏற்படும் மிகப்பெரிய புயல்கள் சூரிய கோரோனலின் மிகப்பெரிய  வெளியேற்றங்களுடன் (CMEs) தொடர்புடையவை என்றும் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் கூறியுள்ளது.

புவிகாந்த புயலின் பாதிப்புகள்:

விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையத்தின் அறிக்கையின் படி, இந்த புவி காந்த புயலின் தாக்கம் முதன்மையாக 60 டிகிரி புவி காந்த அட்சரேகையின் துருவத்தில் இருக்கக்கூடும், எனவே இது பவர் கிரிட்டில் தாக்கங்களை ஏற்படுத்தி செயற்கைக்கோள்களை பாதிக்கும். புவி காந்த புயலால் வானத்தை ஒளிரச்செய்யும் அரோரா ஏற்படலாம் என்றும், இந்த அரோரா அமெரிக்காவின் வடக்கு பகுதியான வடக்கு மிச்சிகன் மற்றும் மைனே போன்ற உயர் அட்சரேகைகளில் தெரியும் என்றும் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்திருக்கிறது.

புவிகாந்த புயல்களான ஜி1 மற்றும் ஜி2 ஆகியவை சிறிய மற்றும் மிதமான அளவிலான புயல்கள் ஆகும், எனவே இவை பெரிய சேதத்தை ஏற்படுத்தாது. ஒரு G2 நிலை புயல் உயர் அட்சரேகை மின் அமைப்புகளில் மின்னழுத்த அலாரங்கள் மற்றும் மின்மாற்றிகளில் சேதத்தை ஏற்படுத்தும். அதுபோல ஜி 1 நிலை புயல் செயற்கைக்கோள் செயல்பாடுகளில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்றும் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com