ஸ்வீடனில் கடந்த வாரம் செம மழை. சாதாரண மழைக்கே பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்குவது வழக்கமான ஒன்று, ஸ்வீடனின் உப்பசலா பகுதி என்பது மொத்தமாகவே சற்று தாழ்வான ஒரு நகரம். அதிக மழை பெய்தால் இந்த நகரத்தின் முக்கிய இடங்கள் மூழ்கிவிடுமாம். அப்படியிருக்க கடந்த வாரம் பெய்த மழையால் உப்பசலாவில் இருக்க கூடிய இரயில் நிலையம் ஒன்று முழுவதுமாக நீரில் மூழ்கியது.
மழை பெய்து , ரயில் நிலையில் மூழ்கியது வார இறுதியில் என்பதால் மக்கள் உற்சாகமடைந்தனர். மிதந்து கொண்டிருந்த ரயில் நிலையத்தில் நாமும் மிதக்கலாம் என யார் யோசித்தார் என தெரியவில்லை. வீட்டுக்கு சென்றார்கள். ஆளுகொரு டியூப்பை எடுத்துக் கொண்டு வந்தார்கள். தண்ணீரில் ஆட்டம் போட ஆரம்பித்தனர். தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு தண்ணீர் ஓட்டப் போட்டியெல்லாம் கூட நடத்தியிருக்கிறார்கள். மழையயும் , மூழ்கிய இரயில் நிலையத்தையும் ஒரு சுற்றுலாத்தளம் போல மாற்றிக் கொண்டனர் மக்கள்
உற்சாகத்தில் இருந்த சிலரிடம் பேசிய போது “ மழைநீரில் குளிப்பதும் ஆட்டம் போடுவதும் அலாதியான விசயம், வீட்டிற்குள் அடைந்து கிடந்து, குழாயில் குளிப்பதற்கும் இப்படி மழைநீரில் குளிப்பத்ற்கும் நண்பர்களோடுச் சேர்ந்து ஜாலியாக இருப்பதற்கும் எவ்வள்வு வித்தியாசம்” என்றனர். இதற்கிடையில் ஒரு பெண் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் துப்பாக்கியை கொண்டு வந்து நடந்து செல்வோர் மேல் தண்ணீரை அடித்து விளையாடினார். ரயில் நிலைய காவலர்களோ மின்சாரம் தண்ணீரில் வரலாம் என்பதால் அவர்களை வெளியேறும் படி கேட்டுக் கொண்டார்.
மக்கள் அனைவரும் ஆட்களை வைத்து போட்டொ எடுக்க ஆரம்பித்தனர். ஜாலி விஷயங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர். லைக்குகள் அள்ளியது. நகர நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததும் மின்சாரம் முழுமையாக நிறுத்தப்பட்டது. மோட்டார்கள் கொண்டு வரப்பட்டு தண்ணீர் உடனடியாக வெளியேற்றப்பட்டது. இரயில் நிலையமும் செயல்பட தொடங்கியது. ஆனாலும் மக்களில் பலரும் தண்ணீரில் விளையாடியதைப் பற்றி இன்னும் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இரயில் நிலையம் மூழ்கியது என்ற எந்த கவலையுமின்றி மக்கள் இவ்வாறு ஜாலியாக இருந்த விஷயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதோடு அவர்கள் பகிர்ந்த புகைப்படங்கள் பலரையும் சென்று சேர்ந்துள்ளது.