மதுரை மீனாட்சியம்மன் கோயில் கடைகளில் தீ விபத்து

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கடைகளில் தீ விபத்து
Published on

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் புத்தக கடை, அலங்கார பொருட்கள் கடை, உட்பட பல கடைகள் அமைந்துள்ளன. இந்நிலையில் அம்மன் சன்னதி நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள சில கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக தல்லாக்குளம், பெரியார் நிலையங்களில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் ஆயிரங்கால் மண்டபத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளது. கிழக்கு கோபுர வாசலில் உள்ளே பற்றிய தீயை அணைக்கும் பணியில் 50க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து மீனாட்சியம்மன் கோயில் கடைகளில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்னவென்று இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. 

தீ விபத்தினால் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதில் எந்த விதமான பாதிப்பு இருக்காது. வழக்கமான முறையில் சுவாமி தரிசனம் செய்ய மக்கள் அனுமதிக்கப்படுவர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com