கர்ப்பிணிகளை பாதிக்கும் ஹெபடைடிஸ்: மருத்துவர் கூறும் அறிவுரைகள்!

கர்ப்பிணிகளை பாதிக்கும் ஹெபடைடிஸ்: மருத்துவர் கூறும் அறிவுரைகள்!
கர்ப்பிணிகளை பாதிக்கும் ஹெபடைடிஸ்: மருத்துவர் கூறும் அறிவுரைகள்!
Published on

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் தேதி, உலகக் கல்லீரல் அழற்சி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஹெபடைடிஸ் நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் ஏற்படுத்தப்பட்டது.

ஹெபடைடிஸ் பி வராமலிருக்க செய்ய வேண்டிய தடுப்புமுறைகள் குறித்து இங்கே விளக்குகிறார் பொதுநல மற்றும் குடலியல் மருத்துவர் ராதா. 

''ஹெபடைடிஸ் பி வைரஸ் 1965-ல்  பருச் ப்ளம்பெர்க் என்ற ஆராய்ச்சி மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை நினைவுகூரும் விதமாக அவரது பிறந்த தினம் உலக ஹெபடைடிஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் உலக சுகாதார நிறுவனம் இந்த தினத்திற்கு மையக்கரு அறிவிக்கப்பட்டு அந்த வருடம் முழுவதும் அந்த மையக்கரு ஓட்டிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான மையக்கரு Hepatitis free future.

மொத்தம் ஐந்து வைரஸ்கள் இந்த ஹெபடைடிஸ் வரக் காரணமாக இருக்கிறது. HEPATITIS A, B, C, D. மற்றும் E. இதில் B, C ஆனது இரத்தம், பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் உடலில் உள்ள நீர்கள் வழியாக பரவக் கூடியது. இதில் ஹெபடைடிஸ் B தடுப்பூசி மூலம் தடுக்க வாய்ப்பு உள்ளது.

கர்ப்பிணிப் பெண் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த நோய் வரும் ஆபத்து அதிகம் உள்ளது. இந்த முறையில் இந்த வைரஸ் பரவல் தடுக்கப்பட்டால் வருங்கால சந்ததியினர் ஹெபடைடிஸ் பி நோயில் இருந்து விடுதலை பெறும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த தாயிடமிருந்து குழந்தைக்கு இந்த நோயை தடுப்பது அவசியம். எனவே இந்த வருட மையக்கரு ஆக இது தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது.


கீழ்கண்ட முறைகளை பின்பற்றி இதைத் தடுக்கலாம்.

1) திருமணமான பிறகு கர்ப்பமாகும் எண்ணங்கள் வந்த உடனே செய்யும் முதல் பரிசோதனையில் ஹெபடைடிஸ் பி இருக்கிறதா என்று சோதனை செய்து கொள்ளலாம்.

2) பரிசோதனையில் இல்லை என்று வந்தால் இதுவரை தடுப்பூசி போடவில்லை என்றால் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஏற்கனவே தடுப்பூசி போட்டு இருந்தால். ரத்தத்தில் போதுமான அளவுக்கு ஆண்டிபாடி இருப்பது உறுதி செய்து கொள்ள வேண்டும்.

3) பரிசோதனையில் பாசிடிவ் என்று வந்தால், அதன் பிறகு HbeAg மற்றும் வைரஸ் லோடு எவ்வளவு உள்ளது என்று பார்க்க வேண்டும். இதன் படி அதிக அளவில் வைரஸ் எண்ணிக்கை உள்ளவர்கள் மற்ற ஸ்கேன் போன பரிசோதனைகள் மேற்கொள்எள வேண்டும்.

4) ஸ்கேன் போன்றவை கல்லீரல் பிரச்சனை இல்லை என்று வரும் பட்சத்தில் பிரசவம் வரை ஹெபடைடிஸ் பி ஆன்டிவைரல் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.

5) பிரசவம் ஆகி குழந்தை பிறந்த உடனேயே ஹெபடைடிஸ் பி Ig மற்றும் தடுப்பூசி போட வேண்டும்.

இந்த மாதிரி வழிமுறைகள் கடைப்பிடித்தால் தாயிடமிருந்து இருந்து குழந்தைக்கு வருவது தவிர்க்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com