சமூக வலைத்தளங்கள் கருத்துக் களங்கள். இன்றைக்கு பெருமளவிலான விவாதங்களை முன்னெடுக்க அவைதான் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. அங்கே கட்டுப்பாடு வேண்டும் என்று குரல் எழும்பி அதற்கான வாய்ப்புகள் உருவானால் ஒரு தலைப்பட்சமான நிலைமை சமூக வலைத்தளங்களிலும் ஏற்படும். பலம் பொருந்தியவன் தனது குரலை அழுத்தமாக பதிவு செய்வான். பலம் குன்றியவன் பேசுவது விதிகளுக்கு முரணானதாக கருதப்படலாம், சட்டத்திற்கு எதிரானதாக எடுத்துக் கொள்ளப்படலாம்.