மழை பெய்யும் நேரங்களில் மக்கள் கவனிக்க வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து மின்வாரியத்தின் எச்சரிக்கைகள்…
ஈரமான துணிகளை உலர்த்துவதற்காக மின்கம்பங்களில் கயிறு கட்ட வேண்டாம்.
குளியலறைகள், கழிப்பறைகள் மற்றும் பிற ஈரமான இடங்களில் நேரடியாக கைகளைக் கொண்டு சுவிட்சுகளை தொட வேண்டாம்.
மின்கம்பங்கள் அல்லது கம்பிகளில் கால்நடைகளை கட்ட வேண்டாம்.
பந்தல்கள் அல்லது விளம்பரப் பலகைகளைக் கட்ட மின் கம்பங்களை பயன்படுத்த வேண்டாம்.
மின்மாற்றிகள், மின் தூண் பெட்டிகள், மின்கம்பங்கள், மின் கம்பிகள், வேலிகள் ஆகியவற்றின் அருகில் செல்லவோ, தொடவோ கூடாது.
முறிந்த மின்கடத்தியை தொடவோ அல்லது அருகில் செல்லவோ கூடாது. முறிந்த மின்கடத்தி குறித்து மின் வாரிய அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கவும்.
மழை நீர் தேங்கியுள்ள தெருக்களில் உள்ள மின் மாற்றிகளின் வேலி அருகே செல்ல வேண்டாம்.
மின் சாதனங்களில் தீயை அணைக்கும் கருவியை அந்த நோக்கத்திற்காக தெளிவாகக் குறிக்கும் வரை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக மணல் மற்றும் போர்வையை பயன்படுத்தவும். மின் தீயை தண்ணீரால் அணைக்க முயற்சிக்காதீர்கள். ஷார்ட் சர்க்யூட் அல்லது தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக மின் இணைப்பை அணைக்கவும்.
எலெக்ட்ரிக்கல் பாயிண்ட்டை ஒருபோதும் ஓவர்-லோட் செய்யாதீர்கள், எலக்ட்ரிக்கல் கேஜெட்களை மாற்றினால், அதே மதிப்பீட்டில் மாற்றவும்.
மழை நீர் தேங்கும் போது மின் பெட்டிகள் அருகே செல்ல வேண்டாம். உடனடியாக அருகில் உள்ள மின் நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.
தனிமைப்படுத்தப்பட்ட மரங்கள், தனிமைப்படுத்தப்பட்ட குடிசைகள் மற்றும் கூடாரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைய வேண்டாம். அருகில் தங்குமிடம் இல்லையென்றால், மரங்கள், மின்கம்பிகள், மின்கம்பங்கள் மற்றும் உலோக வேலிகள் ஆகியவற்றிலிருந்து தாழ்வான இடத்தைக் கண்டறியவும்.
நீர் அல்லது நீர் தேங்கிய பகுதிகளிலிருந்து விலகி இருங்கள். மின்னல் அல்லது இடியின் போது மின் சாதனங்கள் மற்றும் தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம்.
இடி அல்லது மின்னலின் போது திறந்திருக்கும் ஜன்னல்கள் அல்லது கதவுகளுக்கு அருகில் நிற்க வேண்டாம்