"காலம் தாழ்த்தாமல் புதுச்சேரியில் கலைஞர் சிலை அமைக்கவும்"-புதுவை எதிர்க்கட்சிகள் பரிந்துரை

"காலம் தாழ்த்தாமல் புதுச்சேரியில் கலைஞர் சிலை அமைக்கவும்"-புதுவை எதிர்க்கட்சிகள் பரிந்துரை
"காலம் தாழ்த்தாமல் புதுச்சேரியில் கலைஞர் சிலை அமைக்கவும்"-புதுவை எதிர்க்கட்சிகள் பரிந்துரை
Published on

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் அரசு சார்பில் உடனடியாக சிலை அமைக்க வேண்டுமென புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையிலான திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள், புதுவை முதல்வர் ரங்கசாமிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த கோரிக்கை ஏற்கெனவே திமுக சார்பில் 5 முறை வலியுறுத்தப்பட்டு அதற்காக புதுச்சேரி அரசு சார்பில் குழுவும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், “காலம் தாழ்த்தாமல் உடனடியாக சிலை வைக்க வேண்டும்” என புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில் முதல்வர் ரங்கசாமியைக்கு இன்று மீண்டும் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் ஐந்து முறை முதல்வராக இருந்து எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்து தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திழகச் செய்தவர் கலைஞர் கருணாநிதி. மேலும் திமுக-வின் தலைவராக 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக இருந்து வழிநடத்தியவர் அவர். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். பொதுவாழ்வில் 80 ஆண்டுகாலம் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பணியாற்றிய அவருக்கு, புதுச்சேரி அரசு சார்பில் சிலை அமைக்கப்பட வேண்டும். புதுச்சேரி மாநில திமுக சார்பில் இப்பேரவையில் இதை ஏற்கெனவே கோரிக்கை வைத்தோம். தலைவர் கலைஞர் அவர்களின் 4–ஆம் ஆண்டு நினைவு தினத்தன்று நாங்களும், எங்கள் கழகத்தின் மூத்த முன்னோடிகளும் தங்களை நேரில் சந்தித்து சிலை நிறுவ வலியுறுத்தினோம்.

தாங்களும் தலைவர் கலைஞர் அவர்களோடு நெருங்கிய தொடர்பும், நட்பும் இருந்தது என்றும் அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு என்றும் தெரிவித்ததோடு, புதுச்சேரி அரசு சார்பில் கலைஞர் அவர்களுக்கு சிலை அமைக்கப்படும் என்று உறுதியும் அளித்தீர்கள். ஆனால் அதற்கான முயற்சியை அரசு எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

வருகின்ற ஆகஸ்ட 8–ஆம் தேதியோடு எங்கள் தலைவர் கலைஞர் மறைந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற இருக்கிறது. ஆகவே, மாண்புமிகு முதல்வர் அவர்கள், கலைஞரின் நினைவு நாளுக்குள் புதுச்சேரி அரசு சார்பில் சிலை அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com