பாதுகாப்பு முதல் வேளாண் துறை வரை.. கடந்தாண்டும்.. இந்தாண்டும்.. நிதிஒதுக்கீ்டு ஓர் ஒப்பீடு

பாதுகாப்பு முதல் வேளாண் துறை வரை.. கடந்தாண்டும்.. இந்தாண்டும்.. நிதிஒதுக்கீ்டு ஓர் ஒப்பீடு
பாதுகாப்பு முதல் வேளாண் துறை வரை.. கடந்தாண்டும்.. இந்தாண்டும்.. நிதிஒதுக்கீ்டு ஓர் ஒப்பீடு
Published on

மத்திய பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய துறைகளுக்கு நடப்பு நிதியாண்டிலும் அடுத்த நிதியாண்டிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த ஒப்பீட்டை பார்க்கலாம்.

பாதுகாப்புத்துறை:

2021-22ஆம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு 4 லட்சத்து 78 ஆயிரத்து 196 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அடுத்த 2022-23ஆம் நிதியாண்டில் பாதுக்காப்புத்துறைக்கு சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு 5 லட்சத்து 25 ஆயிரத்து 166 கோடியே 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2021-2022: 4,78,196
2022-2023: 5,25,166

வேளாண்துறை:

வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறைக்கு 2021-22ஆம் நிதியாண்டில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 531 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், அடுத்த நிதியாண்டில் அது ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 513 கோடியே 62 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


2021-2022:1,31,531
2022-2023:1,32,513

ரயில்வே துறை:

ரயில்வே துறைக்கு நடப்பு நிதியாண்டில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 55 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அடுத்த நிதியாண்டில் அது1 லட்சத்து 40 ஆயிரத்து 367 கோடியே 13 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

2021-2022: 1,10,055
2022-2023: 1,40,367

உள்துறை:

உள்துறைக்கு நடப்பு 2021-22ஆம் நிதியாண்டில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 547 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், அடுத்த நிதியாண்டில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 776 கோடியே 55 லட்சம் ரூபாயாக உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2021-2022: 1,66,547
2022-2023: 1,85,776.55

தொலைத்தொடர்பு துறை:

தொலைத்தொடர்பு துறைக்கு நடப்பு நிதியாண்டில் 75 ஆயிரத்து 265 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், அடுத்த நிதியாண்டில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 406 கோடியே 82 லட்சம் ரூபாயாக அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-2022: 75,265
2022-2023:1,05,406.82

சாலை போக்குவரத்து துறை:

சாலை போக்குவரத்துத்துறைக்கு நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 101 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், அடுத்த நிதியாண்டில் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 107 கோடியே 71 லட்சம் ரூபாயாக உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2021-2022: 1,18,101
2022-2023: 1,99,107

நுகர்வோர் நலன்:

நுகர்வோர் நலன், உணவு பொதுவிநியோகத் துறைக்கு நடப்பு நிதியாண்டில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 948 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், அடுத்த நிதியாண்டில் அது 2 லட்சத்து 17 ஆயிரத்து 684 கோடியே 46 லட்சம் ரூபாயாக குறைத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2021-2022:2,56,948
2022-2023:2,17,684

கிராமப்புற வளர்ச்சித்துறை:

கிராமப்புற வளர்ச்சித் துறைக்கு நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 690 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அடுத்த நிதியாண்டில் அது ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 203 கோடியே 63 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2021-2022: 1,33,690
2021-2022: 1,38,203

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com